குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலத்தில் கடந்த 03.07.2012 காலை 9.00 மணிக்கு வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சு சிவகுமாரனின் மணிவிழா அம்பாள் பூஜையுடன் ஆரம்பமானது.

மேற்படி விழா காலநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினர்களாக திரு.இளங்கோவன் ஆளுனரின் செயலாளர் வட மாகாணம்) பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும்  மாவட்டக் கல்விப்பணிபாளர்கள் இவர்களுடன், குரும்பசிட்டியின் சிறந்த சமுகசேவையாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
 
மேலும் 22 வருடங்களுக்குப்பின் முதல் முறையாக பொன்.பரமானந்தர் மாவித்தியாலயத்தில் மீண்டும் மிடுக்குடன் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. விழாவில் தலைமையுரை ஆற்றிய மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் வெற்றிமணி சிவகுமாரன் அவர்கள் தான் கற்ற பாடசாலையில் (ஆரம்பக்கல்வி) தனது மணிவிழாவை விரும்பி ஏற்ற நிகழ்வு, யாவருக்கும் ஓர் முன்மாதிரியானது என்றார். அத்துடன் குரும்பசிட்டியின் கலைப் பாரம்பரியம் யாவரும் வியந்து போற்றக்கூடியதொன்றாகும் என்றார்.

நடனங்கள் சிறுவர் உரைகள் மற்றும் யாழ்- வெற்றிமணி நடத்திய சித்திரப்போட்டிகளில் பரிசுபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அமரர் மு.க.சு.சுப்பிரமணியம் அவர்களின் (முன்னாள் அதிபர்: பொன் பரமானந்தர் மாகவித்தியாலயம்.) அவர்கள் அன்று ஓய்வு பெற்றவேளையில் நடந்த விழாவின் பின், தற்போது அதே மேடையில் எனக்கு மணிவிழா நடப்பது மனதுக்கு மகிழ்வு தருகின்றது.

மேற்படி விழாவினைச் சிறப்பாக யாழ் வெற்றிமணி நிறுவனமும் குரும்பசிட்டி அன்பர்களும் இணைந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. விழாவில் கலைமகன் என்னும் மணிவிழா மலர் வெளியிடப்பட்டது.

தகவல்-யாழ் வெற்றிமணி