குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
caption

குரும்பசிட்டி தனிச் சைவக்கிராமமாக விளங்கிவந்தது. இங்கு சித்திவினாயகர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகிய பேராலயங்களும் பத்துக்கு மேற்பட்ட சிறிய ஆலயங்களும் இருந்து வந்தன.சிறிய ஆலயங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை வைரவர் ஆலயங்கள். பேராலயங்கள் இரண்டும் ஒரேவட்டகையில்  அமைந்ததுடன் காளியம்மன் இரு வரைவர் ஆலயங்கள்என்பனவும் சேர்ந்து அமைந்து ஆலயச் சூழலாக விளங்கின.

ஆலயங்களில்புராணப்படிப்புக்களையும், சமயற்சொற்பொழிவு,கதாப்பிரசங்கங்களை ஆலயங்களில் நிகழ்த்தி வந்தனர். திருவாளர்கள் சீ.கணபதிப்பிளை,  மு. இராமலிங்கம்,  கனக.செந்திநாதன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காலத்திற்கு காலம் ஆலயங்களில் மட்டுமல்ல இங்குள்ள பொது நிறுவனங்களிலும் உள்நாட்டு வெளிநாட்டு சமயப் பெரியார்கள் வரவழைக்கப்பட்டுச் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

 

வருடாந்த மகோற்சவ காலங்களில் ஊரே திரண்டுவிடும்.வைகாசித் திருநாளில் பிள்ளையார் ஆலயத்திலும் மார்கழித்திருவாதிரை நாளில் அம்பாள் ஆலயத்திலும் மகோற்சவம் இறைவெய்தும்.  அம்பாள் ஆலய மகோற்சவ காலத்தில் நாட்டின் எலாப் பகுதிகளிலிருந்தும் எமது மக்கள் தவறாது வந்து கூடுவர். சித்திரத் தேரில் அம்பாள் பவனிவரும் திருக்கோலக் காட்சியைக் கண்டுகளிக்கும் திருநாளில் பலநூறு மக்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் காட்சி பக்தி பூர்வமாக இருக்கும். கடந்த நூற்றாண்டு ஆரம்பத்தின் முன் பின்னாக சின்னச் சட்டம்பியார் என ஊர் மக்களால் அழைக்கப்பட்ட திரு.ந.சின்னத்தம்பிஅவர்கள் பிள்ளையார் ஆலயத்தை இன்றுள்ளவாறு நிறுவினார் எனப்படுகிறது. அம்பாள் ஆலயத்தில் மார்கழி மகோற்சவ காலத்தில் பத்து நாட்களும் தொடர்ச்சியாகச் சமயச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து சன்மாக்கசபை சிறப்பாக நடாத்திவந்தது. சமயப் பிரசுரங்களையும் இச் சபையினரும் தனிப்பட்டோரும் வெளியிட்டு வழங்கினர். இரு பேராலயங்களிலும் பூசகர்கள் பக்திசிரத்தையோடு அதிகாலை வரை செயற்பட்டு வந்தனர். இவ் ஆலயங்களின் அதிகாலை மணியோசைகள் ஊர் முழுவதும் வியாபித்து மக்களை துயிலெழுப்பும். கண் விழிக்கும் போதே கடவுள் நினைவோடெழுந்து தத்தம் கடமைகளைத் தொடங்குவது நாளாந்த நிகழ்வாகும்.  அயர்ந்து தூங்கியோர் விரைந்து எழுந்ததும் அம்பாள் ஆலயமணி கேட்டதா என்றே  முதலில் வினவுவர். தினமும் நிகழும் மூன்று நேரப் பூசைகளுக்கும் செல்லும் பக்தர்கள் பலர் இருந்தனர்.

 


இந்தியச் சிற்பிகளை அழைத்து அதனைச் செய்ததுடன் மூல விக்கிரகத்தையும் இந்தியாவிலிருந்தே பெற்றிருந்தார் எனப்படுகின்றது.அம்பாள் ஆலயத்தின் தோற்றம் சுமார் 150, 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனப்படுகிறது. அது  தோன்றியமை பற்றிய ஜதீகக்கதை ஒன்று உண்டு. மன்னாருக்குச் சென்று நெற்செய்கையில் ஈடுபட்ட குப்பிளான் மக்களால் மூலவிக்கிரகம் அங்கிருந்து கொண்டுவரப்பட்டதது எனப்படுகிறது. மன்னாரில் விக்கிரகம் நிலத்தில் புதைந்திருந்ததென்றும்,  அப்படியல்ல ஒரு மரப்பொந்தில் வேற்று மததினருக்கு அஞ்சி மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டதென்றும் கூறப்படுகின்றது.

குறிப்பு: இவ் ஆலயங்கள் அனைத்தும் 1990ஆம் ஆண்டில் இரானுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருக்கின்றது. இதில் அம்பாள் ஆலயம் 1986ஆம் ஆண்டில், எம் கிராமம் இரானுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய போது அது முற்றகவே அழிக்கப்பட்டிருந்தது.