குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
sabai

1934 ஆம் ஆண்டில் சன்மார்க்கசபை உதயமாகியமை குரும்பசிட்டியின் பொதுவாழ்வில் ஒரு முக்கியமைற்கல் ஆகியது. அன்றிலிருந்து இன்றுவரை அதன் பன்முகப்பட்ட பணிகள் கிராமத்தின் கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கிவருகின்றது.

குரும்பசிட்டியின் முன்னேற்றத்தை தலையாய இலக்காகக் கொண்டிருந்த இச் சபை மக்கள் மனங்களிலே சன்மாக்க, சமயம், கல்வி, கலை,  கலாச்சாரவிழுமியங்களை வளர்த்தல், தாய்மொழிப்பற்று , தேசப்பற்றுக்களை ஊட்டுதல், கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை, பொதுத்தேவைகளை நிறைவு செய்தல் முதலான பணிகளைச் செய்து வருகின்றது.

காந்தீய, பாரதிய நெறிகளில் பற்றுறுதிகொண்ட, தேசியமனப்பாங்கும் சமூகஉணர்வும் மிக்க, பொருளாதாரவளமும் பரோபகார சிந்தையுமுடைய ஈழகேசரி நா.பொன்னையா அவர்கள் இச் சபையின் ஆரம்பகாலத்தலைவராக 15ஆண்டுகள் தொடர்ந்து விளங்கியமை இச் சபையின் முக்கியபலமாகியது.

 

அத்தோடு மகாதேவ வித்தியசாலையில்லிருந்து புதிய பிரவாகமாக மேல்லெழுந்த ஆசிரியர்கள் பலரும் இதனுடன் இணைந்து பெரும் பங்களிப்புகளைச் செய்யமுன்வந்தனர். முதலாவது வருடச் செயற்குழு உறுப்பினர் 11பேரில் 8பேர் ஆசிரியர்கள் என்பது கவனிக்கத்தக்கது. சுமார் 12ஆண்டுகள் தனியார் அறைகளிலும் தற்காலிக கொட்டில்களிலும் செயற்பட்டு வந்த சன்மார்க்கசபைக்குப்

பொது மக்களிடம் இருந்து பெற்ற நிதிமூலம் வாங்கப்பட்ட காணியில் 1946இல் பொன்னையா அவர்கள் தனது சொந்தச் செலவில் ஒரு மண்டபத்தை அமைத்துக்கொடுத்தார்.

தேசம் விடுதலையை வேண்டிநின்ற அன்றைய காலகட்டத்தில், எமது கிராமம் அச்சூழலால் போசிக்கப்பட்டு கிராமிய அபிவிருத்தியை அவாவிநின்றது. சன்மாக்கசபை அந்தக்காலத்தின் தேவையை நிறைவு செய்யும் வல்லமையுடன் விளங்கி பன்முகப்பட்ட பணிகளையும்  இவற்றுக்கா மேற்கொண்டது. தேசிய உணர்வை ஊட்டக்கூடிய வகையில் காந்திஜனனவிழாவை, பாரதிவிழா போன்றவற்றை நடத்தியது. சிறந்த ஒரு வாசிகசாலையையும், நூல்நிலையத்தையும் செயற்படுத்தியது.கிராமத்தின் பொதுத் தேவைகளையும் சிறப்பாக அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்ய முயன்றுளைத்தது.

         சன்மாக்கசபை ஓர் ஒடுங்கிய கல்லொழுங்கையாகக் காணப்பட்ட பிரதான வீதியை (ஈழகேசரி பொன்னையா வீதி) விசாலித்து, நவீனமயப்படுத்த நடவடிகை எடுத்ததுடன் ஏனைய் வீதிகளையும் செப்பனிட்டு இன்றைய நிலையை அடையச்செய்தது. தபாற்கந்தோர், தந்தி தொலைபேசிச்சேவை, பிரசவ வைத்தியசால, ஆரம்ப சுகாதார நிலையம், ஜக்கிய பண்டகசால, ஜக்கிய நானய சங்கம், விளையாட்டுமைதானம் முதலானவற்றை ஏற்படுத்தி முயன்றுழைத்து வெற்றி கண்டது. குரும்பசிட்டியின் ஒவ்வொரு பெளதிகள அபிவிருத்தியிலும் இச் சபையின் பங்களிப்பு இருந்து வந்தது.

இவற்றைவிடக் குரும்பசிட்டிப்பகுதி தேசிய அடிப்படையில் பெருமை சேர்க்கும் வைகையில் சன்மாக்கசபை மேற்கொண்டு வந்த கல்வி, கலை, இலக்கிய சமயப்பணிகளே முதன்மையானதாகும். பாடநூல்கள், இலக்கிய நூல்களை வெளியிடுதல், கலை இலக்கிய விழாக்கள் மகாநாடுகளை நடாத்துதல்,  தமிழ் கூறும் நல்லுலகின் புலமைசால் அறிஞ்ஞர்களை வரவளைத்து அறிவுரைகளைப் பெறுதல், ஆய்வரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடாத்துதல் போன்ற பணிகளை 1990வரை சிறப்பாக சபை மேற்கொண்டு வந்தது. இவற்றின் மூலம் நாடு போற்றும் பல எளுத்தாளர்களை, கலைஞர்களை, பேச்சாளர்களை, சமூக சிந்தனையாளர்களை உருவாக்கி பெருமை கண்டது. பொதுமனப்பாங்குடயவர்களாக, பொதுப்பணிகளில் நம்முடையவர்களை உருவாக்கி வந்தது.

              சன்மாக்க சபையின்  சமயற்பணிகளும் குறிப்பிடற்பாலதாகும். சமயநூல்களை வெளியிடுதல் சிவதீட்சைகள் பெறச்செய்தல், தலயாத்திரைகளை ஒழுங்கு செய்தல், சமயச் சொற்பொழிவுகள், விழாக்களை நடாத்துதல் போன்ற பல பணிகளைக் காலத்துக்கு காலம் சபை மேற்கொண்டு வந்தது சிறப்பாக மார்கழி மாதம் திருவெம்பாவை உற்சவகாலங்களில் அம்பாள் ஆலயத்தில் சமயற் பெரியார்களை வரவளைத்துச் சொற்பொழிவுகளை வருடம்தவறாது நடாத்திவந்தது. சமய அறிவுப்போட்டிகளையும் நடத்தியது. சபையின் பணிக்கும் தனித்தனியான கிளைகள் நிறுவப்பட்டுச் செயற்படுதப்பட்டுவந்தது. 1990இல் ஏற்பட்ட புலப்பெயர்வினால் சபையின் செயற்பாடுகள் பின்னடைந்தன. எனினும் இணுவில் தெல்லிப்பழை ஆகிய இடங்களில் தன்னாலான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 நன்றி