குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
Kurumbasiddy

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரும்பசிட்டி, சுமார் 1.5 சதுரக் கிலோமீற்றர் பரப்புடையது வடக்கே பலாலி விமானத்தளமும், கிழக்கே வயாவிளான், தென்கிழக்கே புன்னாலைக்கட்டுவன், தெற்கே குப்பிளான், ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. இப்பகுதி தொன்றுதொட்டு மயிலிட்டி தெற்கு என வழங்கப்பட்டது.

இக் கிராமம் 1987 இல் சுமார் 730 குடும்பங்களை கொண்டிருந்தது. கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கமத்தொழில் செல்வர், கைத்தொழில் வித்தகர் பலரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தம் கடின ௨ழைப்பினால் உயர்ந்து சுயமாகவே ஒரு எழில் மிகு நகரமாக வளர்ந்து வந்தது.

விநாயகர் ஆலயம் சார்ந்த ஒரு சிறு காணி குரும்பசிட்டி எனப் பெயர் பெற்றிருந்தது.  இங்கு குறும்பர் என்று ஒரு இனத்தவர் பாளையம் அமைத்து வாழ்தனர் என்றும் . அதனாலே இப்பெயர் வந்தது என்றும் கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு,

caption

குரும்பசிட்டி தனிச் சைவக்கிராமமாக விளங்கிவந்தது. இங்கு சித்திவினாயகர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகிய பேராலயங்களும் பத்துக்கு மேற்பட்ட சிறிய ஆலயங்களும் இருந்து வந்தன.சிறிய ஆலயங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை வைரவர் ஆலயங்கள். பேராலயங்கள் இரண்டும் ஒரேவட்டகையில்  அமைந்ததுடன் காளியம்மன் இரு வரைவர் ஆலயங்கள்என்பனவும் சேர்ந்து அமைந்து ஆலயச் சூழலாக விளங்கின.

ஆலயங்களில்புராணப்படிப்புக்களையும், சமயற்சொற்பொழிவு,கதாப்பிரசங்கங்களை ஆலயங்களில் நிகழ்த்தி வந்தனர். திருவாளர்கள் சீ.கணபதிப்பிளை,  மு. இராமலிங்கம்,  கனக.செந்திநாதன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காலத்திற்கு காலம் ஆலயங்களில் மட்டுமல்ல இங்குள்ள பொது நிறுவனங்களிலும் உள்நாட்டு வெளிநாட்டு சமயப் பெரியார்கள் வரவழைக்கப்பட்டுச் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

Ponparamanathar School

இலங்கையை ஆட்சிசெய்த போத்துக்கேயரும் ஒல்லந்தரும் சுதேசமதங்கள அடக்கி ஒடுக்கித் தமது கிறிஸ்தவமதப்பிரிவுகளை வளர்க்கும் மதத்தீவிரவாதிகளாக விளங்கினர். பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டதும் அவர்கள் கடைப்பிடித்த சமய சமரசக் கொள்கை காரணமாகச் சுதேசமதங்களான சைவமும், பெளத்தமும் 19ஆம் நூற்றாண்டில் மருமலர்ச்சி காணத்தொடங்கியது.

பிரித்தானியர் ஆட்சியின்போது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பப் பல மதக்குழுக்கள் இலங்கைக்கு வந்தன. இக்குழுக்கள் தமது மதத்தைப் பரப்புவதற்கு வாய்ப்பாக பாடசாலைகளை நிறுவினர். அங்கு கல்வி கற்கவரும் மாணவர்கள் கிறிஸ்வத மதத்துக்கு சேரும்படி வற்புறுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் வந்து சேந்த இவ்வாறான மதக்குழுக்களில் அமெரிக்கன் மிசன் முதன்மை பெற்றது.

Kurumbasiddy

குரும்பசிட்டி கிராமத்திற்கு நான்கா புறமும் வடக்கே பலாளி இராணுவ மூகமும் கிழக்கே வசாவிளான்   தெற்கே குப்பிளானும்  மேற்கே கட்டுவனும்  உண்டு . 

குரும்பசிட்டி கிராமத்தின் மாதிரி வரைபடத்தில் குரும்பசிட்டி கிராமத்தின் பிரதான சந்தி , பிரதான வீதிகள் ஒழுங்கககள்,  குடிமனைகள், ஆலயங்களில் முத்துமாரி அம்மன் , சித்திவிநாயகர் , பிரதான விளையாட்டு மைதானம் , பாடசாலைகள், பொதுச்சபைகள் மன்றங்கள், வீதிகள், வியாபார நிலையங்கள் என்பனவற்றைக் குறிப்பததோடு, 

பின்னர் இரானுவதினால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போன பகுதிகளையும், குறிக்கிறது.

sabai

1934 ஆம் ஆண்டில் சன்மார்க்கசபை உதயமாகியமை குரும்பசிட்டியின் பொதுவாழ்வில் ஒரு முக்கியமைற்கல் ஆகியது. அன்றிலிருந்து இன்றுவரை அதன் பன்முகப்பட்ட பணிகள் கிராமத்தின் கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கிவருகின்றது.

குரும்பசிட்டியின் முன்னேற்றத்தை தலையாய இலக்காகக் கொண்டிருந்த இச் சபை மக்கள் மனங்களிலே சன்மாக்க, சமயம், கல்வி, கலை,  கலாச்சாரவிழுமியங்களை வளர்த்தல், தாய்மொழிப்பற்று , தேசப்பற்றுக்களை ஊட்டுதல், கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை, பொதுத்தேவைகளை நிறைவு செய்தல் முதலான பணிகளைச் செய்து வருகின்றது.

காந்தீய, பாரதிய நெறிகளில் பற்றுறுதிகொண்ட, தேசியமனப்பாங்கும் சமூகஉணர்வும் மிக்க, பொருளாதாரவளமும் பரோபகார சிந்தையுமுடைய ஈழகேசரி நா.பொன்னையா அவர்கள் இச் சபையின் ஆரம்பகாலத்தலைவராக 15ஆண்டுகள் தொடர்ந்து விளங்கியமை இச் சபையின் முக்கியபலமாகியது.