குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

இன்று 06.10.2011 முதல் மக்கள் குடியேற்றத்துக்காகவும் ஆலயங்களின் மற்றும் பாடசாலையின் மீள் பிரவேசத்திற்க்கும் அனுமதிகிடைத்திருக்கின்றது. 100 மீற்றர் உள்ளேசெல்ல ஆறுமாதமாக எங்கள் கிராமஅபிவிருத்திச்சங்கம் மேற்கொணடஅயராத முயற்சிக்கு 200 ஏக்கர் பரப்பளவுக்கு

உள்ளே குடியேற எம்வருக்குகிடைத்திருக்கும் அரியவாய்பைபெற்றுக் கொடுத்த கிராமஅபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு.நடராஜா அவர்களுக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் குரும்பசிட்டியர்களாகிய நாங்கள் சிரம் தாழ்த்தவேண்டும். அல்லும் பகலும் சுட்டெரிக்கும் வெய்யில் என்றும் பாராது கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மனம் சலிக்காது தொண்டாற்றும் எங்கள் உறவுகளின் பணிதொடர நாமெல்லோரும் மனமாரவாழ்த்தவேண்டும்.

வசாவிளான் மத்தியமாகவித்தியாலயத்தின் பின் புறத்தில் ஆரம்பித்து. அரசடிச்சந்தியை அண்மித்து குப்பிளான் வரை புதிய பாதுகாப்புவேலி அமைக்கப்பட்டுள்ளதாக அறியபடுகின்றது. மீட்கபட்டபிரதேசங்களில் மக்களின் குடியேற்றத்தை அவானித்தே ஏயைய பகுதிகளைவிடுவிக்ககோர முடியும் என்பதேயதார்த்தமாகும். மீட்கபட்டநிலத்தில் நடமாட்டம் இல்லையென்றால் மிகுதியான எச்சமும் துலைந்துபோகும் துர்ப்பாக்கியநிலை காணப்படுவதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்று காலையில் பொன்பரமானந்தர் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மீளக்கையளிக்கும் நிகழ்வுக்குமுன்னோடியாக பாதுகாப்புதரப்பினராலேயே துப்பரவு செய்யப்பட்ட பொன் பரமானந்தர் மகாவித்தியாலயசுற்றாடலில் பந்தலும் அமைத்துவிழாவுக்குவந்திருந்த அனைவருக்கும் குளிர் பானங்களும் வழங்கிஅரசநிகழ்வாகவே இன்யைநிகழ்வை நாடத்தி இருந்தனர்.

யாழ் மாவட்டகட்டளைத்தளபதியும் அரசாங்கஅதிபரும் பங்கேற்ற இன்நிகழ்வு தெல்லிப்பளை உதவிஅரசாங்கஅதிபரின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றியகட்டளைத் தளபதிஎங்கள் கிராமத்தின் மீட்சிக்குஅச்சாணியாகதொழிற்படும் கிராமஅபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திருநடராஜா ஆசிரியரின் ஆழுமைத்திறனை புகழ்ந்ததோடுஅவரின் கோரிக்கைக்குசெவிசாய்த்து கேட்டதைவிட அதிகளவுநிலப்பரப்பை மக்கள் பாவனைக்கு ஒப்படைத்ததோடு நாளை முதல் எம்மவர்கள் தங்களின் கோயில் மற்றும் வீடுகளுக்குசெல்லமுடியும் எனவும் அறிவித்தார்.

நோயும்,முதுமையும் உடலைத்தான் வருத்தமுடியுமேதவிரமனத்திடமும்,நெஞ்சில் ஓர்மமும் கொண்டமனிதனின் உள்ளத்தை ஒருநாளும் வருத்தமுடியாது என்பதற்கும், எடுத்தகாரியத்தில் வெற்றிபெறும் வரைஓய்வின்றி உளைக்கவேண்டும் என்பதற்கும் உதாரணமாக திரு.நடராஜா அவர்கள் திகழ்கின்றார். தெய்வங்கள் உறையும் ஆலயங்கள் தேடுவாரற்றுப்போவதா என்றுகோவில் இல்லாஊரில் குடியிருக்கவேண்டாம் என்ற சுலோகத்துடன் ஆரம்பித்தஎங்கள் ஊரைமீட்க்கும் பணிஆலயவளாகங்களையும் பாடசாலையையும் மீட்டெடுத்த இன்றையவிஜயதசமிநாள் எம்மவரைப் பொறுத்தளவில் மிகமுக்கியமானதினமாகும். 

காட்டுமரங்கள் வளர்ந்துபற்கைளாககாட்சிதரும் காளிஅம்பாள் கோவிலும்,வினையகற்றும் வினையாரேதுதிக்கைசிதைந்தநிலையில் வானம் தெரியும் கூரையினகீழ் வீற்றிருக்கும் கோலமும்,முற்றமேதெரியாது முள் மரங்ககள் படர்ந்துபோனமுத்துமாரியம்பாள் கோவிலும் மீண்டும் பொலிவுறும்,மணியோசைகேட்டுஎழுந்துமலர் தூவிநாம் வணங்கும் நாள் நெருங்கும், பட்டதெல்லாம் போதுமெனவிட்டுசென்றஎங்கள் மண்ணை நாடிவந்துஎம் உறவுகள் குடியேறும்; தூரம் வெகுதொலைவில் இல்லை. - ஆக்கம் மகேசன் புலந்திரன்