குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

 

பொன்னைப் பெயரில் கொண்டு (நகைகடை பாலா) புன்கை வதனம் கொண்ட பாலா அண்ணன் குரும்பசிட்டி இழந்து விட்ட மனிதநேயம் நிறைந்த ஒரு மனிதன் மட்டுமல்ல நட்புக்கும், நம்பிக்கைக்கும் உதாரணமாக வாழ்ந்த எங்கள் ஊரின் சிறந்த ஒரு மனிதர். 

ஒரு மனிதன் பூரணமாக தன்னை வளர்த்துக் கொள்வதென்றால் கல்வியுடன் நின்றுவிடாது நல்ல இடங்களுக்கு செல்ல வேண்டும், நல்ல மனிதர்களுடன் பழகவேண்டும் என்று சொல்வதுண்டு. அதற்கமைய எங்கள் ஊர் விநாயகர் ஆலயத்தில் கண்டு கொண்ட அப்பழுக்கற்ற திறந்த மனம் கொண்டவர்களில் பாலா அண்ணனும் ஒருவர். 

பகல் இரவாய் கண்விழித்து இருந்து பச்சை நிறத்தில் வர்ணம் பூசி குடமுழுக்கு நாம் செய்த குரும்பசிட்டி விநாயகர் கொடிய யுத்தம் வந்த பின்னர் ஊரைவிட்டு நாம் ஒடியபின், தன் வாசல் வரை வந்து இன்று எம்வரவைக் காத்திருக்கும் கொடுமை முன்பு கண்டதுண்டோ.

கொடியவர்கள் எம் மண்ணை அழித்து இன்று 20 வருடமாகினாலும் பாலா அண்ணனின் பணத்தில் நாம் பூசிய பச்சை வர்ண நிறம் மட்டும் அழியாத கோலமாக விநாயகரின் மண்டபத்தை உயிர்ப்பித்து வைத்திருக்கும் கோலத்தைப் காண்கையிலே அதில் பாலா அண்ணனின் நிழல் தோன்றுகின்றது. கேட்கின்ற தொகைக்கு மறு கேள்வி கேட்காது புன்னகையுடன் அள்ளிக் கொடுத்த அந்த இனிய மனிதன் நம்பிக்கை என்னும் சொல்லிற்கு உதாரணம் கற்பித்த உன்னத உள்ளம். ஊரின் வளர்ச்சியிலும் கோவில்களின் முன்நேற்றங்களிலும் பின் புலத்தில் நின்று ஊக்குவித்த நல்ல பண்பாளன். 

எங்கள் மண்ணும் நாங்களும், அவரின் குடும்பமும் இளக்கக்கூடாத ஒரு மனிதனை இளந்து விட்டோம், பாலா அண்ணன் இவ் உலகை விட்டுப் பிரிந்தாலும் எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்கின்ற புன்கை மன்னன்.

 

-  புலந்திரன் மகேசன் -