- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 2525
பல்கலைப் பரிணாம வித்தகர்களைக் கொண்டது எங்கள் குரும்பசிட்டிக் கிராமம் என்பது யாவருக்கும் தெரிந்த ஒன்று. இங்கே நாடகத்துறையில் காலூன்றிய பரிச்சயமான பலருள் திரு.க.சிவதாசன் அவர்களும் ஒருவராவர். இவர் இளைஞராக சன்மார்க்க இளைஞர் சங்கத்தில் நிர்வாக சபை உறுப்பினராக இருந்தவேளையில் 1960 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவிலே, ஊரிலே மிகச்சிறந்த நடிகரான திரு.க.கோபிநாத் அவர்களால் எழுதித் தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றப்பட்ட ‘பழிக்குப்பழி’ என்ற நாடகத்தில் கதாநாயகனாகத் தோன்றி நாடகக் கலையில் தன்னை ஈடுபடுத்தினார்.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 2373
லால்குடி சங்கீத பள்ளியின் அதிபர் Dr. லக்ஷ்மி ஜெயனின் மாணவி செல்வி சிந்தியா ஸ்ரீகாந்தனின் வயலின் அரங்கேற்றம் அண்மையில் Harrow Arts Centre இல் நடைபெற்றது. இவ் அரங்கேற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் புதல்வர் சங்கீத சூடாமணி லால்குடி.கிருஷ்ணனும், கௌரவ விருந்தினராக மிருதங்க வித்துவான் காரைக்குடி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 2440
மெல்பேர்னில் பரத கலாஞ்சலி நாட்டிய பள்ளியின் நடத்துனர் ராதிகா சுரேஷ் மகாதேவாவின் மண்டை குடைந்து கொண்டிருந்தது. பழைய பஞ்சாங்கம் போல் ராமாயணம் போடாமல் நவீன யுகத்தில் பறக்கும் நம்மவருக்கு அதிலிருந்து என்ன சொல்லலாம் என்ற குடையல்.
எல்லோர் வாயிலும் இப்போது கேட்பது உலக வெப்பமாற்றம். மனிதனுடைய மூர்க்கத்தனமான முன்னேற்றத்தால் சிதையும் உலக வளங்கள். இதையெல்லாம் யோசித்த ராதிகாவின் மூளையில் பிறந்ததுதான் அசோகவனம்.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 2441
புகைப்படங்களின் மேல் அழுத்தி படத்தின் அளவை பெரிதாக்கி பார்க்கவும்
சென்ற 01.07.08 தொடக்கம் 08.07.08 வரை உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட மகாநாடு தென்ஆபிரிக்காவில் சிறப்புடனே நடைபெற்றது. அன்நிகழ்வில் குரும்பசிட்டிக்கு பெருமை தேடித்தந்த 'ஆவணஞானி" திரு.இரா. கனகரத்தினம் அவர்கள் அங்கு சென்று கலந்து சிறப்பித்தார். அத்தோடு உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பை நிறுவியவரும் அவரேயாவர்.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 2081
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு தமிழரின் கல்வி போன்ற இன்னோரன்ன துறைகளில் பணியாற்றி வந்த வருகின்ற ஏராளமான தமிழர்களை இனங்காண முடியும். ஆயினும், குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் கடந்த 45 ஆண்டுகளாக ஆற்றி வரும் அரிய தமிழ்ப் பணிக்கு ஈடு இணையில்லை என்றே கூறவிடலாம்.
ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை ஆவணப்படுத்தி, அதனை நிரந்தரமாகப் பேணிப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் பணியில் கண்டி உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.
கனடாவில் / குரும்பசிட்டி ஜயாத்துரை ஜெகதீசன் அவர்கள் தன் தாய்க்கும், தாய் மண்ணுக்கும் படைத்த 2 நூல்கள
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1951
ஓரு நாளில் இரு நூல்கள்......
கொலுவீற்றிருந்த குரும்பைநகர்
மாணிக்கப் பரல்கள் (கவிதைகள்)
கனடாவில் நடந்த நூல் வெளியீட்டு விழா
குரும்பசிட்டி ஜயாத்துரை ஜெகதீசன் அவர்கள் தன் தாய்க்கும், தாய் மண்ணுக்கும் படைத்த 2 நூல்கள் கடந்தத சனிக்கிழமை (7-6-2007) கனடா கந்தசாமி கோவில் விழா மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது.
குரும்பசிட்டி கிராம அபிவருத்திச் சங்கத்தின் 60 வருட நிறைவைக் குறிக்கும் முகமாக எங்கள் ஊர் அன்னையர்கள் 60 விழக்குகளை ஏற்றி ஆரம்பித்து வைக்க செந்தமிழ் குரல் கொண்ட கோவை அமுதனின் அறிவிப்போடு கவிநாயகர் கலாநிதி வி. கந்தவனம் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1773
குரும்பசிட்டி மண்னைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், வவு/பூவரசங்குளம் மகா வித்தியாலய ஆசிரியையுமான செல்வி. சுகிர்தா சிவசுப்பிரமணியம் அவர்கள் நிருத்திய கலா சேஷத்திரம் என்ற நாட்டியப் பள்ளியை 15.09.2007 இல் ஆரம்பித்து ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டும், நாட்டியப் பள்ளி மாணவர்களுடைய நடன ஆற்றுகையை வெளிக்கொணரும் நிகழ்வும் கடந்த 13.09.2008 சனி பி.ப. 02 மணிக்கு வவு/நெளுக்குளம் மகா வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1864
கடந்த 21.09.2008 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியிலும், 04.10.2008 இங்கிலாந்திலும் கலாநிதி கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் எழுதிய பாவாரம் என்னும் பக்திப்பரவச நூல் யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் தமிழர்கலையக்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
மேற்படி நூல் அறிமுகவிழாவிற்கு வெற்றிமணி சிவத்தமிழ் பிரதம ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் தலைமைதாங்கினார். வரவேற்புரை ஆன்மீகத்தென்றல் திரு.த.புவனேந்திரன் (சிவத்தமிழ் உதவி ஆசிரியர்) கூற, நூல் விமர்சனத்தை இலக்கியச்செம்மல் இந்துமகேஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1856
கடந்த23.08.2008 சனிக்கிழமை யேர்மனியின் கம் நகரில் வெற்றிமணி பத்திரிகையின் விழா இடம்பெற்றது.
மேற்படி விழாவிற்கு குரும்பசிட்டி திரு.சின்னத்துரை தயாபரன் அவர்கள் (யாழ் பல்கலைக்கழகப் பொறியிலாளர்) பிரமவிருந்தினராகவும், சிறப்புவிருந்தினராக குரும்பசிட்டி ஆசிரியை திருமதி வலன்ரீனா இளங்கோவன் (கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1924
9-08-2008 சனிக்கிழமை மாலை ஜேர்மனியில் உள்ள டோற்முன் நகரில் திரு ஜயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்களின் தொகுப்பான கொலுவீற்றிருந்த குரும்பைநகர் என்ற வரலாற்று நூல் அறிமுக விழா இனிது நடைபெற்றது.
பல காலமாக எங்கள் கிராமத்தில் நாதஸ்வர தவில் மழை பொழிந்த தவில் வித்துவான் மறைந்த சூடாமணி அவர்களின் புதல்வன் பாலசுப்பிரமணியம் அவர்கள் இந் நிகழ்வில் நாதஸ்வரகானம் இசைக்க தன்குழுவினருடன் கொலன்ட் நாட்டில் இருந்து வருகைநதந்திருந்ததோடு விழாவுக்கு வந்தவர்களை மண்டப வாசலில் இருந்து ஒளி மயமான எதிர் காலம்.... என்ற இனிய கானத்தினத்துடன் விழா மேடைவரை அழைத்து சென்று தன்பங்களிப்பை வழங்கியபோது
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1876
வயது முதிர்ந்தபின்பும், ஒய்வூதியகாலத்திலும் சமூகநலன்காக்கும் தொண்டை ஊருக்கு அளித்து எங்கள் ஊரில் அழியாத சரித்திரமாக எம்மவர் மனங்களில் கலந்துவிட்ட பல பெரியார்களைக் கொண்ட குரும்பசிட்டி மண்ணில், வாழ்க்கையின் நாளாந்த ஒட்டத்துடன் சமூதாயப்பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு அல்லும் பகலும் அவலமுறும் எம் மக்களுக்கு இன்றய காலகட்டத்தில் பணி புரிபவர்களில் பொறியியலாளர் திரு. சின்னத்துரை தயாபரன் அவர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றார்..
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1751
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் வாழ்ந்தாலும் தாய்நட்டின் பற்றுக் கொண்டு தம் பங்கை வழங்கிக்கொண்டிருக்கும் எங்கள் ஊரின் மைந்தர்களில் பரந்த சிந்தனையுடனும் தொலை நோக்குடனும் செயற்படும் மதிப்பிற்குரிய சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் தமிழர்தம் மொழி, கலாச்சார, வரலற்றை நூல் வடிவில் ஆவணமாக்கிய பெருமைக்குரியவர்.
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1821
உலகம் முன்னேறும் வேகத்தினால் நாம் அடைந்து வரும் நன்மைகளின் அளவிற்கு மக்களின் வாழ்வில் பலவகைக் குறிக்கீடுகளும்; பெரிய அளவு அழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். இயற்கையின் சீற்றமும் போரின் தாக்கமும் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றது என்பதே இவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் இவற்றுடன் ஒப்பிடும் போது மனிதன் தனது திட்டமற்ற போக்காலும், வரையறையற்ற செயற்பாடுகளாலும் தன்னையே அழித்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் இடரை உண்டுபண்ணுவதால் உலகம் இன்று மாற்ற முடியாத நோய்காவிகளைக் கொண்டுள்ளதுடன்,
- Details
- Category: எம்மவர்பக்கங்கள்
- Hits: 1823
மிருதங்க சேஸ்திரத்தின் அதிபர் மிருதங்க ஞானவாருதி திரு.வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவன் செல்வன் பிரணவன் குகமூர்த்தியின் கனிஸ்ர மிருதக அரங்கேற்றம் கடந்த 07.12.2007 அன்று ஸ்காபுறோவில் நடைபெற்றது. அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் மண்டபம் நிறைந்த ரசிகர் கூட்டம் அரங்கேற்றத்திற்கு சிறப்பைத்தந்தது. அதிலும் மேலாக பிரணவன் கல்வி பயிலும் பாடசாலையின் அதிபர், உபாஅதிபர், மற்றும் இசைஆசிரியர் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு பிரணவனின் கல்வி மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த திறமைகளை பாராட்டிச்சென்றது அனைவரையும் கவர்ந்த ஒண்றாக இருந்தது.