குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக்கலைஞர் திரு.க.சிவதாசன் அவர்களின் கலைச்சேவையை பாராட்டி கடந்த 10.06.07 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் பாராட்டுவிழா இடம்பெற்றது. மேற்படி விழாவினை குரும்பசிட்டி அமைச்சூர் நாடக வட்டமும், ஓயதஅலைகள் நாடக மன்றமும் வெற்றிமணி பத்திரிகையும் இணைந்து நடத்தியது.

ஆரம்ப உரையில் வெற்றிமணி ஆசிரியர் நாடகக்கலைஞர் திரு.க.சிவதாசன் அவர்கள் கலைபேரரசு ஏ.ரி.பொன்னத்துரை அவர்களின் பட்டறையில் நாடகம் பயின்று அவரை தனது குருவாகக் கொண்டவர் என்றும், எழுத்தாளர் அமரர் மு.திருநாவுக்கரசு அவர்களின் நாடகங்களுக்கு மேடையில் உயிர் கொடுத்த நல்ல கலைஞன் என்றும். அவர் யேர்மனியில் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி இன்று கனடாவிலும் பல நாடகங்களை மேடை ஏற்றி தனது திறமைகளையும் நாடகத்தின் மேல் தான்கொண்ட வேட்கையையும் உணர்தி வருக்கின்றார். திரு.க.சிவதாசன் அவர் யேர்மனியல் வாழ்ந்த காலத்தில் பல நடகக் கலைஞர்களை தட்டிக்கொடுத்து உருவாக்கியவர். அவருக்கு இன்று ஒரு பாராட்டு விழாவினை அவர் வளர்த்த கலைஞர்கள் மத்தியில் எடுப்பது சாலப்பொருந்தும் என்றார்.

       ஆன்மமீகத் தென்றல் சிவத்தமிழ் உதவி ஆசரியர் த.புவனேந்திரன்; அவர்கள் தனக்கும் நாடகக்கலைஞர் திரு க.சிவதாசன் அவர்களுக்கு குருவாய் வாய்த்த கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னத்துரை அவர்களையும் நினைவு கூர்ந்து, தாம் இருவரும் இணைந்து நடித்த பகையும் பாசமும் நாடகத்தினைப் பார்த்த மறைந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் அந்நாடகத்தில் நடித்த கலைஞர்களை இவர்கள் நாளைய உலகின் நந்தாவிளக்குள் எனப்பாராட்டினார் என்றார்.

நாடகக்கலைஞர் கதிர்ச்செல்வன் திரு.க.சிவதாசன் அவர்களுக்கு நாடகத் துறையில் இருந்த உண்மையான பற்றினை தன் அனுபம்கொண்டு எடுத்துரைத்தார். இவ்விழாவில் ஓயாத அலை நாடமன்றத்தின் சார்பாக - நாடக வித்தகர்- என்னும் பட்டத்தினைக் கொடுத்துக் கௌரவித்தார். வெற்றிமணி சார்பாக திருமதி சுபாஜினி காண்டிபன் அவர்கள் கவிமழை பொழிந்தார். அதனைத் தொடர்ந்து வெற்றிமணியின் பாரிஸ் வாசகியும் சிறந்த விமர்சகியுமான திருமதி.மங்கை சிவானந்தன் அவர்கள் திருமதி சிவதாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

 குரும்பசிட்டி சு.லோகநாதன் அவர்கள் தாய்மண்ணில் திரு.க.சிவதாசன் அவர்களுடன் வாழ்ந்தகாலத்தில் பெற்ற அனுபவங்களை எடுத்துரைத்து அவரைப் பாராட்டி மகிழ்ந்தார். அவர் இங்கு வாழும் நம்மக்களுக்கு நாடகத்தில் பயிற்சி அளித்து அவர்களையும், எமது அடுத்தசந்ததியினரையும் வளர்க்க முன்னவரவேண்டும் என ஒரு அன்பான வேண்டுதலையும் முன்வைத்தார்.

        அமைச்சூர் நாடகவட்டத்தின் சார்பாக குரும்பசிட்டி திரு.திருமதி செல்வராஜா குடும்பத்தினர் பொன்னாடை போற்றிக் கௌரவித்தனர். பதிலுரை வழங்கிய நாடக வித்தகர் திரு.க.சிவதாசன் அவர்கள். தனக்கு இன்றையதினம் ஒரு மறக்க முடியாத தினமாக மகிழ்ச்சி தரும் தினமாக அமைந்தது என்றார். காரணம் உண்மையில் தனது செயற்பாட்டினை அறிந்தவர்கள், புரிந்தவர்கள் இங்கு பாராட்டிப் பேசியது ஒருகலைஞனுக்கு மகிழ்சியைக் கொடுக்கும் விதத்தில் அமைந்தது. கலைஞனை அறியாமல் பொதுவாக பொதுப்படையாக கலைஞனப்பற்றி பேசுவதை விட, அறிந்தவற்றைப் பேசும் போது நேரடியான ஒரு அன்புப் பரிமாற்றம் நிழந்து கலைஞர் மனதில் உற்சாகம் பிறக்கின்றது. உண்மையானவாழ்த்தாகவும் அவை அமைந்துவிடுகின்றன என்றார். தனது உள்ளங்கனிந்த நன்றியை ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார். வாழும் போதே வாழ்த்தப்பழகுவோம் இதற்கு காலம் நேரம் தடையக இருப்பதில்லை என்பதனை இவ்விழா நினைவூட்டிக்கொண்டது.