Print
Category: எம்மவர்பக்கங்கள்
Hits: 3052

 குரும்பசிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட செல்வி திவ்யா சிவநேசன் அவர்கள் நாட்டுச் சூழ்நிலை காரணமாகத் தலைநகர் கொழும்பில் வாழ்ந்தாலும் தனது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய கலைஞராக விளங்குகின்றார். இவர் நடனம், மிருதங்கம், சங்கீதம் வயலின் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர். இது தவிர எழுத்து வல்லமையும் உடையவர்.

நடனக் கலையை திருமதி தயாநிதி மோகன், திருமதி ராதிகா சுரேஷ் மகாதேவா ஆகியோரிடம் ஆரம்பித்து நளாயினி ராஜதுரை, ஷாமினி ராஜதுரை  ஆகியோரிடம் பயின்று 12 வயதில் அரங்கேற்றம் கண்டவர். அதைத் தொடர்ந்து சென்னையில் மிகப் பிரபலமான நாட்டியாச்சாரியார் பேராசிரியர் ஊ.ஏ சந்திரசேகர் அவர்களிடம் நடனக்கலையின் நுணுக்கங்களையெல்லாம் கற்றுத் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார். அவ்வாறே சங்கீதம், மிருதங்கம், வயலின் துறைகளிலும் எமது நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலும் பயிற்சி பெற்று மெருகூட்டியவர். நட்டுவாங்கக் கலையையும் முறைப்படி சென்னையில் கற்று இன்று கொழும்பில் “அபிநயக்ஷேத்ரா” எனும் நடனப் பள்ளியை நிறுவி நடாத்தி வருகிறார். 

 இவர் குறுகிய காலத்துக்குள்ளேயே பல தரமான நாட்டிய நிகழ்வுகளைத் தயாரித்து மேNடையேற்றிப் பாராட்டுப்  பெற்றவர். அவற்றுள் சில “லலிதலாவண்யம்”, “சாத்வீக ஆராதனை”, “ராசானுபவம்”, “ரசப்பிரவாகம்”, “நிருத்தக் கிரியா”, “ஆத்ம நிவேதனம்”, “கிருஸ்ண நிவேதனம்”, “திரிகாலக்கவி”, “கிருஸ்ணலீலா”, “நிருத்தியானுபவ”, “கிராமத்துச்சாரல்”, “நிருத்தாபிஷேகம்”, “சிவசமர்ப்பணம்” நிருத்த சங்கமம் போன்ற பல  பாராட்டுப் பெற்றதுடன் “ஜதி லய ஈஸ்வரானந்தம்” எனும் நாட்டிய நாடகத்தில் பஞ்ச ஜதிக்கு பரதம், ஒடிசி, கதக், கதகளி, கண்டிய நடனம் ஆகிய ஐவகை நடனங்களையும் ஒரே மேடையில் மேடையேற்றிப் பல பத்திரிகைகளினூடாக மிகவும் பாராட்டு பெற்றவர். அவர் நோர்வேயில் நடைபெற்ற மிகப் பிரபலமான “ழுளுடுழு ஆநுடுயு” கலாச்சார நிகழ்விலும் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நாட்டிய நிகழ்விலும் அருள் ஸ்ரீ கலையத்தினூடாக பங்குபற்றிப் பெருமை பெற்றவர்.

திவ்யா பரநாட்டியம் மிருதங்கம் இரண்டிலும் ஆசிரியர் தரத்தில் முதல் பிரிவில் சித்தியெய்தி “பரத கலா வித்தகர்” எனும் பட்டங்களையும் தன்னகத்தே கொண்டதுடன் வாய்ப்பாட்டு இசையிலும் வல்லமையுடையவர் இவரது அபிநயக்ஷேத்ரா நடனப் பள்ளியின் முதலாவது அரங்கேற்றம் சென்னை ஊ.ஏ சந்திரசேகர் தம்பதிகளின் தலைமையில் இந்திய அணிசேர்க் கலைஞர்களின் பங்களிப்புடன் 25.09.2010ல் கொழும்பு மாநகரில் நடைபெற்று மிகப் பெரிய வெற்றி கண்டு தொடர்ச்சியாகப் பல பத்திரிகைகளில் ரசிகர்களின் விமர்சனங்கள் ஊடாகப் பாராட்டுக்கள் குவிந்தன. பல அரங்கேற்றங்களை மேடையேற்றிய அனுபவம் உடையவர் போல் எவ்வித சலனமும் இன்றி அமைதியான புன்னகையுடன் அநாயசமாக லய சுத்தமாக நட்டுவாங்கத் திறமையை வெளிக்காட்டியதைக் கண்டு ரசிகர்கள் வியந்து நின்றனர். திவ்யாவின் நடன அமைப்பு ஜதி சொல்லும் அழகு, நாட்டியத் திறமை, இசை அறிவு அத்தனையும் பாராட்டி குருவிற்குரிய அத்தனை லட்சணங்களையும் அமையப் பெற்றவள் என அவரது குரு பேராசிரியர் ஊ.ஏ சந்திரசேகர் அவர்கள் உரையாற்றினார். அதையும் மிஞ்சி அவரது இலக்கிய அறிவையும் குறிப்பிட்டுக் காட்டி முத்தமிழும் ஒன்று சேரப் பெற்று ஒரு சிறந்த ஆசிரியை தான் அரங்கேறும் வயதில் ஒரு மாணவியை அரங்கேற்றிய சாதனைக்குரியவராகக் கம்ப வாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் பாராட்டினார். 
அன்றைய நிகழ்வில் திவ்யாவினது பெருமைகளைக் குறிப்பிடும் போது மிகச் சிறிய வயதில் ஒரு தரமான நடன அரங்கேற்த்தை நடத்தியவர். நம் நாட்டில் மிருதங்க கலா வித்தராக விளங்கும் ஒரே ஒரு நடன ஆசிரியை தனது திறமை காரணமாக மிக இள வயதிலேயே அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நடனப் பள்ளியை நடாத்தும் பெருமைக்குறியவர் என இவரது பெருமைகளை அரங்கில் அறிவித்த போது பலத்த கரகோ~ம் வழங்கப்பட்டது.

இதே போன்று அடுத்து 11 வயதுச் சிறுமி சக்தீஸ்வர்யாவின் அரங்கேற்றத்தின் போது நம் நாட்டில் தமிழ் தெரிந்த நடன ஆசிரியை எனக் கூறக் கூடியவர் திவ்யா ஒருவரே எனத் திவ்யாவின் முத்தமிழ் அறிவைக் குறிப்பிட்டு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். அடுத்து ஆரணியின் அரங்கேற்றத்தின் போதும் நம் நாட்டியக் கலைஞர் கலாகீர்த்தி திருமதி.சாந்தினி சிவனேசன் அவர்கள் நட்டுவாங்கத் திறமையையும் பயிற்றுவிப்பையும் மிகமிகப் பாராட்டினார். ஒவ்வொறு அரங்கேற்றமும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அமைவதாக அனைவரும் விமர்சித்தனர்.

இது தவிர சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன தினத்தை இராமகிரு~;ன மி~ன் இலங்கை இந்திய குழரனெயவழைn இணைந்து நடத்திய விழாவில் சுவாமி விவேகானந்தர் சரிதம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகமாக எழுதித் தயாரித்து தனது அபிநயக் ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்கள் மூலம் மேடையேற்றிய பொழுது கிடைத்த பாராட்டுக்கள் அவரது நடன வரலாற்றில் பொறிக்கப்பட்டதாக அமைந்ததுடன் இந்து சமய கலாச்சார அமைச்சினால் நடாத்தப்பட்ட விழாவில் “ அரன் புகழ் பாடும் அருமறை” எனும் நாட்டிய நாடகத்தைத் மூவர் தேவாரங்களை அடக்கித் தயாரித்துத் தானும் பங்கு பற்றி மிகப் பெரிய பாராட்டையும் பெற்றார். இது தவிர 2007ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பாரளுமன்றத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிலும் அலரி மாளிகை பொங்கல் விழா போன்ற நிகழ்வுகளிலும் இந்து சமயக் கலாச்சாரத் திணைக்களத்தின் ஊடாகப் பங்கேற்று வருகிறார். ளுயசம மாநாடு நடைபெற்ற போதும் 3நாள் நிகழ்விலும் பங்கேற்றுச் சிறப்புப் பெற்றவர்.

கலாவித்தகர் பட்டங்களைத் தவிர அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட நாட்டிய மயில் 2010 என்ற நடனப் போட்டியின் ஊடாக Best-Dance Teacher in Sri Lanka  என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அண்மையில் நாட்டிய கலாரத்ன என்ற பட்டமும் சனாதன தர்ம பீடத்தால் வழங்கப்பட்டது. இம்முறை இந்தியாவில் சிவராத்திரியின் போது நாட்டியாஞ்சலி நிகழ்வுகளில் மயிலாடுதுறையில் மகாலிங்கம் ஆலயத்தில் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்வில் இந்த வருடத்திற்கான சிறந்த நாட்டிய தாரகைக்கான “மயூர நாட்டிய தாரகை “ எனும் விருது வழங்கப்பட்டது. திருவிடை மருதூர் ஆலயத்தில் நடைபெற்ற மருத நாட்டியாஞ்சலி எனும் நிகழ்விலும் கேடயம் வழங்கிப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்விலும் தங்கப் பதக்கம் அணிந்து கௌரவிக்கப்பட்டதுடன் தனது குரு பேராசிரியர் ஊ.ஏ சந்திரசேகரனின் நட்டுவாங்கத்தில் நடனமாடும் பேறு பெற்றார். தற்போது டுயமெய யுளாழம டுநலடயனெ எனும் பிரபல நிறுவனத்தில் பதவி வகிக்கும் இவர் திருமண பந்தத்தில் விரைவில் இணையவுள்ளார். எதிர் வரும் 6ம் திகதி கொழும்பில் திருமணம் விமர்சையாக நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாகத் திறமையை வெளிக் கொணர்ந்து பெருமைதேடி வேகமாக வளர்ச்சி கண்டு வரும் செல்வி. திவ்யா சிவநேசன் அவர்களை அவரது கலைச் சேவை வளரவும், திருமண நிகழ்வு இனிதே அமையவும், இல்லறம் சிறப்புறவும் ஒரே மண்ணில் உதித்த யாவரும் மனம் திறந்து பாராட்டுவதிலும், வாழத்துவதிலும் மனநிறைவு காண்போம்.


வாழ்க அவரது கலைச் சேவை ! மலர்க அவர்களது மணவாழ்க்கை 
   


 குரும்பசிட்டி 
 கலா ரசிகர்கள்