குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர் ஆ.சி.நடராஜா  அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் வெளியீடு கடந்த 21.12.2011. புதன்கிழமை உரும்பிராய் காளிகோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

குடாநாட்டில் உள்ள பாடசாலைகள் யாவற்றிற்கும் இலவசமாக இந்நூல் வழங்கப்படுகின்றது. இந்த அரிய நூலினை வெற்றிமணி பத்தரிகை தனது 19 வது வெளியீடாக வெளி யிட்டுள்ளது.
புத்தகத்துடன் குழந்தைகள் பாடல்களை இலகுவாகப் பாடிப் பழக வசதியாக ஒலிப்பேழையும் இணைக்கப்பட்டுள்ளது.

விழாவில் குரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி அருளேஸ்வரி வேதநாயகம் (முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர்) மற்றும் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் திரு.ஆறு.திருமுருகன். உரும்பிராய் இந்துக்கல்லூரி அதிபர். அ.பஞ்சலிங்கம் முன்னாள் வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் டிவகலாலா,கொக்குவில் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர். பொன். கமலநாதன் மற்றும் குரும்பசிட்மக்களும் யாழ். தினக்குரல் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.


பி.குறிப்பு:
குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாசாலையில் 18.12.2011. நடைபெற்ற அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களின் அஞ்சலி நிகழ்வில்  வட மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.ப.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, பாடசாலைகளுக்கு விநியோகிக்க தேவையான நூல்களைப் பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

தகவல்: யாழ்.வெற்றிமணி