குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

தற்காப்பு கலைகளில் மிக முக்கி பங்கை வகிக்கும் கராட்டிக்கலையானது யப்பானிய ரியூக்யுத் தீவுகளில் ஆரம்பித்து இன்று உலகின் எல்லா நாடுகளிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோராலும் பயிலப்பட்டு வரும் கலையாகும். சீரிய செயன் முறை வடிவங்களையும் ஒழுக்க கோட்பாடுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தற்காப்பு முறையானது தன்னை தாக்கவருபவர்களைத் தடுக்கும்

யுக்திமுறை களையே கற்றுக் கொடுக்கின்றதே தவிர வீணே சென்று வீரம் காட்டும் ஒரு விளையாட்டு அல்ல. எதிர் விளையாட்டு வீரனையும் சமனாக மதிக்க கற்பிக்கப்படும் இக் கலையானது ஒழுக்க்தின் உயர் படிமானங்கள் கொண்ட ஒரு விளையாட்டு என்றே வர்ணிக்கப்படுகின்றது.

இந்தக்கலையை தன் 5 வயது முதல் கற்று அதன் அதி உயர்விருதான கறுப்பட்டியை பெற்று இளைய மாணவர்களுக்கு அதன் நுட்பங்களை கற்பிக்கும் உபாத்தியானாக மிளிரும் எம்மவர் சிறுவன் கனடாவில் வாழும் செல்வன் சரன்ஜன் இச் சிறுவன் இக் கலைக்கே உரித்தான ஒழுக்கத்கிற்கு ஒரு உதாரணமான வாழ்ந்த எம் ஊரைச் சேர்ந்த  காலஞ்சென்ற காவற்துறை அதிகாரியான முத்தையா இராசேந்திரம் அவர்களின் பூட்ட பிள்ளை ஆவார். எவர் எதைக் கற்க வேண்டும் என்பது இறைவன் இட்ட வழி என்பது இச் சிறுவனின் செயற்பாட்டில் புலப்படுகின்றது. மூத்தோரை மதிக்கும் குணமும், கற்றோர்க்கு தலை சாய்க்கும் குணாதியமும் கொண்ட இச் சிறுவன் சுய மரியாதை கொண்டு வாழ்ந்த இராசேந்திரம் அவர்களின் தோட்டத்தில் தோன்றி அவர் பாதையில் பயணிக்கும் இளந்தளிர்.

ஆங்கிலத்துடன், பிரேஞ்சு மொழியில் தேர்ச்சி உள்ள இச் சிறுவன்  பாடசாலைக் கல்வியுடன் ஒய்வு நேர பொழுது போக்காக சதுரங்கம் விளையாட்டிலும் ஆர்வம் காட்டிவருகின்றார். கனடா தழுவிய சதுரங்க கழகத்தில் அங்கத்துவனாகச் சேர்ந்து சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார். இச்சிறுவனின் தாயாரைத் தலைவராக கொண்ட  இந்திய சமூகங்களின் உதவியுடன் நாடாத்தப் பட்டுவரும் சாயி நற்பணிமன்றத்தில்  நற்பணி செய்வதும், சாயி பஜனை பாடுவதும், இசைக்கருவிகளை இசைப்பதும், அறிவியில் போதனைகளில் பங்கேற்பதும் இச் சிறுவனின் வாராந்த செயற்பாடுகள் ஆகும்.


கனேடிய ஆகாயப்படை கழகத்தில் இணைந்து 5வருடங்களிற்கு இளநிலைப் பயிற்சியினை அண்மையில் ஆரம்பித்திருக்கும் செல்வன் சரன்ஜன், தூய்மையும், ஒழுக்கமும் கொண்ட ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் சிறந்த கல்வியையும், நல்ல மனிதனாக சமுதாயத்தில் உருவாக நடை முறைகளைப் போதிக்கும் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்பதோடு ஆகாயப்படை அணியினரின் வாத்திய இசை அணியில் ஒரு அங்கத்தவராகவும் உள்ளார்.

ஓவ்வொரு பிள்ளையின் உயர்வுக்கு பின்னாலும் பெற்றார்களின் பின்புலம்  இருப்பதை அனைவரும் அறிவோம, அது போலவேதான் சுற்றி சுழலும் இவ் உலகில் மரம் பட்டு, பனி உறைந்து, குளிர் காற்று சுற்றி வீசும் தேசத்தில் கடமையும் வீடும் என்று இருந்து விடாது, நேரத்தை பொன் என மதித்து,  நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியில் நேரம் காலம் பாராது ஒய்வு உறக்கமின்றி அலையும் பெற்றோர்கள் வரிசையில் இச் சிறுவனின் தாய் கௌரி பத்மலிங்கம் முற்போக்கு சிந்தனை கொண்ட சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவிடும் ஒரு எடுத்துக்காட்டு உள்ள பெண் என்றால் மிகையாகாது.    

நற்பண்பு கொண்டு,சமுதாயத்தில் சிறந்த ஒரு பிரஜயாக சரன்ஜன் பிரணமிக்க இறைவனின் ஆசியை வேண்டுகின்றோம்.

 

ஆக்கம் - மகேசன் மைந்தன்