குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

லால்குடி சங்கீத பள்ளியின் அதிபர் Dr. லக்ஷ்மி ஜெயனின்  மாணவி செல்வி சிந்தியா ஸ்ரீகாந்தனின்   வயலின் அரங்கேற்றம் அண்மையில் Harrow Arts Centre இல் நடைபெற்றது. இவ் அரங்கேற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் புதல்வர் சங்கீத சூடாமணி லால்குடி.கிருஷ்ணனும், கௌரவ  விருந்தினராக மிருதங்க வித்துவான் காரைக்குடி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அரங்க பூசையை தொடர்ந்து வயலின் அரங்கேற்ற நிகழ்வு வரவேற்புரையுடன் ஆரம்பமானது . அவ் வரவேற்புரையை செல்வி.சிந்தியாவின் சகோதரன் ஹரிசன் ஸ்ரீகாந்தன் ஆங்கிலத்திலும், பிரவீன்  மகேஸ்வரன் தமிழிலும்  உரையாற்றினர்.  அடுத்து சிந்தியாவின் அரங்கேற்ற நிகழ்வுக்கென இலங்கையில் இருந்து வருகை  தந்திருந்த ஸ்ரீமதி. லைலா தவகுமார் கடவுள் வாழ்த்து இசைத்தார்.

திருமால் மருகா என்ற அன்தொளிகா  ராகத்தில் அமைந்த வர்ணத்துடன் வயலின்  இசை நிகழ்வு  ஆரம்பமானது, ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த பாஹி பாஹி, ஜகதானந்த என்ற பஞ்ச  ரத்ன  கீர்த்தனை, முத்து  சாமி தீட்சகர்   இயற்றிய  ஆனந்தம்ருத, போகீன்ற, பாபநாசம் சிவன் இயற்றிய மகாலக்ஷ்மி , பிலகரி ராகத்தில் அமைந்த மா மயுர  தொடர்ந்து ராகம்-தானம் -பல்லவி இசைக்கப்பட்டன.  
 
தொடர்ந்து கலைஞர் கௌரவிப்பு நடை பெற்றது, அரங்கேற்ற நிகழ்வில் மிருதங்கம் இசைத்த ஸ்ரீ. பிரகாஷ் , கடம் இசைத்த ஸ்ரீ.பிரதாப் ,கஞ்சிரா இசைத்த செல்வன்.அபிராம் சகாதேவன், தம்புரா இசைத்த செல்வி.ஜெயந்தினி கங்காதரன், நிகழ்வை தொகுத்து வழங்கிய ஸ்ரீமதி.துளசி சுதந்திரகுமார்  ஆகியோர் கௌரவிக்க பட்டனர்.ஸ்ரீமதி.லக்ஷ்மி ஜெயன் சிந்தியாவுக்கு  பட்டமளிப்பு  சான்றிதழை  வழங்கி கௌரவித்தார்.
     
கௌரவிப்பு நிகழ்வை அடுத்து பிரதம விருந்தினர் லால்குடி. கிருஷ்ணன் உரை ஆற்றினார். அவர் தம் உரையில் சிந்தியா வயலினில் இசைத்த தனி ஆவர்த்தனம் மிகத்திறமையாக இருந்தது என்றும், சிந்தியாவின் 10 வருட கடின உழைப்பின் பலனை இன்று வெளிக்கொண்டு  வந்துள்ளார்  என்றும்  தெரிவித்தார். தொடர்ந்து வயலின் இசை நிகழ்வில்  ஆரபிமானம்,குழல் ஓசை,தில்லானா இசைக்கப்பட்டு  மங்களத்துடன் நிகழ்வு  இனிதே நிறைவுபெற்றது.
 
செல்வி சிந்தியா கடந்த 10 வருடங்களாக Dr. லக்ஷ்மி ஜெயன்  அவர்களிடம் லால்குடி பாணியில்  வயலின் கற்று  தரம் 7(Grade-7) முடிவு செய்துள்ளார். தற்பொழுது உயர் தரம் பயின்று வரும் இவர் வயலின் மட்டும் அல்லாது பியானோ மற்றும் மேலைத்தேய வயலினிலும் திறமை மிக்கவராக திகழ்கின்றார்.


செல்வி சிந்தியா திரு. ஸ்ரீகாந்தன், திருமதி. வத்சல்யா ஸ்ரீகாந்தன் அவர்களின்  புதல்வியும், திரு.திருமதி.முருகேசு,  குரும்பசிட்டி  திரு.திருமதி ராசரத்தினம் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இனிய மாலைப்பொழுதில்  நல்லதொரு வயலின் அரங்கேற்ற நிகழ்வை பார்வையிட்ட மகிழ்ச்சி.

 


நன்றி