குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

மெல்பேர்னில் பரத கலாஞ்சலி நாட்டிய பள்ளியின் நடத்துனர் ராதிகா சுரேஷ் மகாதேவாவின் மண்டை குடைந்து கொண்டிருந்தது. பழைய பஞ்சாங்கம் போல் ராமாயணம் போடாமல்  நவீன யுகத்தில் பறக்கும் நம்மவருக்கு அதிலிருந்து என்ன சொல்லலாம் என்ற குடையல். 

எல்லோர் வாயிலும் இப்போது கேட்பது உலக வெப்பமாற்றம்.  மனிதனுடைய மூர்க்கத்தனமான முன்னேற்றத்தால் சிதையும் உலக வளங்கள். இதையெல்லாம் யோசித்த ராதிகாவின் மூளையில் பிறந்ததுதான் அசோகவனம்.

ராமாயணத்தையும்  உலகவெப்பமாற்றதையும் இணைத்து உருவாக்கின நாட்டிய நாடகம்.  உடனே தன் குரு பி.டி.நரேந்திரனை சென்னையிலிருந்து வரவழைத்து உலக மாசுக்களை பற்றி மாசுஅற்ற கலாக்ஷேத்ரா பாணியில் ஒரு நடனத்தை ஏற்பாடு செய்தார்.

பி.டி.நரேந்திரன் உலகப்பிரசித்தி பெற்ற ருக்மணி தேவிஅருண்டேலின் கடைசி நேர் மாணவர்களில் ஒருவர். ஒரு மாதம் மெல்பேர்னில் தங்கி ராதிகாவின்  மாணவ மாணவிகளை ஆயத்தம் செய்தது அவர்களின் பாக்கியம்.  சீதையை உலகமாதாவாகவும் ராவணனை உலகத்தை சிறை எடுக்கும் மூர்க்கனாகவும்  ராமரை உலகத்தை மீட்கும் உத்தமராகவும் பாவனை செய்கிறது.  இந்த நாட்டிய நாடகம்.  இதில் ராவணனின் பத்துத்தலைகள் எமது ஐம்புலன்களையும் ஐந்து உடலுருப்புகளையும் குறிக்கும்.  அவற்றை வைத்து நாம் எமது மூர்க்கத்தனத்தால் எப்படி உலக வளங்களை அழிக்கிறோம் என்பது மூலக்கருத்து.  எம்மவரில் யார்  சூழலைப்பொறுத்தவரையில் ராமராகவும் ராவணனாகவும் நடக்கிறார்கள் என்பது சிந்தனைக்குரிய விஷயம்.    
அசோகவனத்தில் ஆரம்பமாகி சீதை தன் சோகக்கதையை திரிசடை எனும் அன்புள்ள அரக்கியிடம் கூறுகிறாள்.  மண்ணுக்குள் அகழ்ந்தெடுத்த தன்னை மண்ணைக்காக்கும்  ராகவனுடன்  சேர்த்த பொன்னாள்.  உலக நச்சுகள் கூனியைப் போன்றவை. கைகேயின் மனசை மாசு படுத்தி ராமனை காட்டுக்கு  அனுப்புகிறது.

காட்டில் சூர்ப்பனகை வரவு இமூக்கறுப்பு இராவணன் கொதித்தெழுந்து மாயமான் காட்டி சீதையை சிறை எடுத்தல் தொடர்கிறது. ராவணனாக  ஆடிய  பி.டி.நரேந்திரனின் பாவம்,அபிநயம் அபாரம். மெல்பேர்ன் ரசிகர்கள் மனதில் அவர் இடம் பிடித்து விட்டார்.

பின்னர் அனுமனின் நுழைவு. அவரும் வானரப்படையும் உலகை காக்கும் சூழல் காப்போர் (நnஎசைழnஅநவெயடளைவ) ஆகும்.   வானரப்படை   சேதுபந்தனம் கட்டி இலங்கையில் போர் தொடங்குகிறது.  சாகக்கிடக்கும் லக்குவனுக்காக அனுமன் சஞ்சீவ மலையை தூக்கி வருகின்றான்.  கடைசியில் போரில் ராமன் ராவணனை அழிக்கிறான்.  மண்டோதரி உலகத்தை அடக்கிய உனக்கு உன் மனதை அடக்க முடியவில்லை என்று புலம்பும் இடம் மிக உருக்கமாக  அமைந்துள்ளது. 

சீதை தீக்குளிப்பதுதான் தான் உலக வெப்ப மாற்றம். எமது செயலால் மாதா  வெம்மையில் குதித்து விட்டாள்.  இதிலிருந்து  விடிவு உண்டோ எனில் நாம் நினைத்தால்  'உண்டு' என்ற நம்பிக்கையுடன் முடிகிறது நடனம்.  நடனத்தின் நல் கருத்துகளை கேட்டு நமது தேவைகளையும் தேவைகளால் வரும் குப்பைகளையும் குறைக்காவிடின் அன்டாடிகா    பனிக்கட்டிகள் உருகி அலாஸ்காவில் கத்தும் எனவும் சமுத்திரம் பொங்கி வெப்ப மாற்றத்தை அறிவிக்கும் எனவும் பஞ்சபூதம் உருக்குலைந்து ஒரு நிழலாய் திரியும் எனவும் மாசு எனும் ஆறாவது பூதம் கெக்கரித்து கொட்டமிடும் என்று உணர்ச்சியுடன் பாட்டு வரிகளை எழுதியுள்ளார் னுச.வா.வே.சுப்ரமணியம் சென்னையில் பிரபலமான கவிஞர்.  இந்த நடனத்துக்காக அவர் எழுதிய இனிய வரிகளுக்கு தேன் சொரியும்  இசையமைத்து பாடியுள்ளார் சென்னை புகழ் ஒ எஸ் அருண்.  அவருடைய கணீர் என்ற குரல்இ மண்டோதரியின் சோகக் கண்ணீர் விடும் சாமாவிலிரிந்து அக்னி தேவன் சீதையின் சிறப்பைச் சொல்லும் சிந்து பைரவி வரை  ஒலித்தது.  

ராதிகா  கைகேயியாகவும் த்ரிசடையாகவும் ஆடி முகபாவத்தை பிழிந்தெடுத்தார்.   அதற்கேற்ற மாதிரி அவருடைய மூத்த மாணவர்களும் சிறிதும் சளைக்காமல் ஆடினார்கள்.  சூர்ப்பனகை மூக்கறுபடும் போது சபையோருக்கு வலித்ததுஇ   கம்பீரமாய் நின்ற ராமனுக்கு இ  குகன் துடுப்பு வலிக்கும் பொதுஇ    சபையொரும் ஆற்றில் மிதந்தார்கள் அனுமனும் சீதையும் சம்பாஷிப்பது அருமையான இடம். சின்னம் சிறிசுகள்  வானரப்படையாகவும்  சீதையுடன் ஆடும் மான் மயில்கள் ஆகவும் வந்து நம்மை மகிழ்வித்தார்கள்.  பழையதும் புதியதும் இணைத்து கண்ணுக்கு குளிர்ச்சியும் காதுக்கு தேனும் நடுவில் சிந்தனைக்கு வேலையும் அளித்த ராதிகாவுக்கு எமது பாராட்டுகள்.

 

மங்களம் வாசன்