குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

புகைப்படங்களின் மேல் அழுத்தி படத்தின் அளவை பெரிதாக்கி பார்க்கவும்

சென்ற 01.07.08 தொடக்கம் 08.07.08 வரை உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட மகாநாடு தென்ஆபிரிக்காவில் சிறப்புடனே நடைபெற்றது. அன்நிகழ்வில் குரும்பசிட்டிக்கு பெருமை தேடித்தந்த 'ஆவணஞானி" திரு.இரா. கனகரத்தினம் அவர்கள் அங்கு சென்று கலந்து சிறப்பித்தார். அத்தோடு உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பை   நிறுவியவரும் அவரேயாவர்.

 

1. படம்:- தென்னாபிரிக்கா கலைஞர்களினால் நடாத்தப்பெற்ற கலை நிகழ்சிகளை கண்டுகளிக்கும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க நிறுவியவர் திரு இரா கனகரத்தினம் அவர்களுடன் மற்றும் வெளி நாடுகளில் இருந்து நிகழ்சியில் பங்கு பற்றியோர்களும்.

2. படம்:- உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய திரு இரா. கனகரத்தினத்துடன் பா.உ. சேனாதிராசா, தென்னாபிரிக்க தபால் தகவல் தமிழ் அமைச்சர் படையாச்சி, தென்னாபிரிக்கா தமிழர் கூட்டிணைப்புக் கழகத் தலைவர் திரு மிக்கி செட்டி, இலங்கை அமைச்சர் திரு சந்திரசேகரன் அவர்களும்.

3. படம்:- தென்னாபிரிக்க தமிழ் சங்கத் தலைவர் திரு பாலநாயுடு அவர்கள் குரும்பசிட்டி 'ஆவண ஞானி" தமிழர் பண்பாட்டு இயக்க நிறுவியவர் திரு இரா கனகரத்தினம் அவர்களுக்கு பொன்னாடை போத்தி கௌரவிக்கின்றார்.

 செய்தித்தகவல், புகைப்படங்கள் :- தம்பி புவனேந்திரன்- Germany