குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

ஓரு நாளில் இரு நூல்கள்......
 
                   கொலுவீற்றிருந்த குரும்பைநகர்
                       மாணிக்கப் பரல்கள் (கவிதைகள்)

 


  கனடாவில் நடந்த நூல் வெளியீட்டு விழா
 குரும்பசிட்டி ஜயாத்துரை ஜெகதீசன் அவர்கள் தன் தாய்க்கும், தாய் மண்ணுக்கும் படைத்த 2 நூல்கள் கடந்தத சனிக்கிழமை (7-6-2007) கனடா கந்தசாமி கோவில் விழா மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. 
 
 குரும்பசிட்டி கிராம அபிவருத்திச் சங்கத்தின் 60 வருட நிறைவைக் குறிக்கும் முகமாக எங்கள் ஊர் அன்னையர்கள் 60 விழக்குகளை ஏற்றி ஆரம்பித்து வைக்க செந்தமிழ் குரல் கொண்ட கோவை அமுதனின் அறிவிப்போடு கவிநாயகர் கலாநிதி வி. கந்தவனம் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் பிரசித்தி பெற்ற பல இலக்கிய ஆய்வாளர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் மதிப்புரை நிகழ்த்த மகாஜனாக் கல்லூரியின் இளைப்பாறிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களும், யாழ் பல்கலைக்கழக முi;னைநாள் விரிவுரையாளர் சுப்பிரமணிஜயர் அவர்களும் சிறப்பாக எங்கள் கிராமத்தின் தொன்மைதனை விளிப்போடு எடுத்தியம்பினர்.

மாணிக்கப் பரல்கள் என்னும் கவிதை நூலை வெளியீட்டு வைத்து உரையாற்ற திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் வந்திருந்ததோடு இன்றும் தன் மாறாத கணீர் என்ற குரலில் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தர். 
 
மங்காத புகழ் கொண்ட எங்கள் கிராமத்தின் வரலாற்றுப் பெருமையை நூலாக வடித்து தந்த ஜயாத்துரை ஜெகதீசன் அவர்களின் முயற்சிக்கு என்றும் எம்மவர்கள் தலை வணங்குவதோடு, கையயோடு கைகோர்த்து உதவவேண்டும்.
 

 

- குரும்பசிட்டிவெப்.கொம் -11.06.2008, 21:36