குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

கடந்த 21.09.2008 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியிலும், 04.10.2008 இங்கிலாந்திலும் கலாநிதி கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் எழுதிய பாவாரம் என்னும் பக்திப்பரவச நூல் யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் தமிழர்கலையக்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

மேற்படி நூல் அறிமுகவிழாவிற்கு வெற்றிமணி சிவத்தமிழ் பிரதம ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் தலைமைதாங்கினார். வரவேற்புரை ஆன்மீகத்தென்றல் திரு.த.புவனேந்திரன் (சிவத்தமிழ் உதவி ஆசிரியர்) கூற, நூல் விமர்சனத்தை இலக்கியச்செம்மல் இந்துமகேஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

 

நூலாசிரியர் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் தன் பதிலுரையில் நூலின் சிறப்பையும் அதன் பயன்பாட்டையும், பாவரங்களைப் படவேண்டிய முறையினையும் எடுத்தியம்பினார். பாவாரம் நூல் பாரதத்திருத்தலங்கள் 63, இனதும், ஈழத்துத் திருத்தலங்கள் 45, இனதும் வரலாற்றுக்குறிப்புக்கள், புகைப்படங்களுடன் பாடப்பட்ட நூலாகும். 368 பக்கங்களைக்கொண்ட சிறந்த கட்டமைப்பில் சென்னை காந்தளகம் வெளியிட்டுள்ளது.