குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

 டந்த23.08.2008 சனிக்கிழமை யேர்மனியின் கம் நகரில் வெற்றிமணி பத்திரிகையின் விழா இடம்பெற்றது.
 
மேற்படி விழாவிற்கு குரும்பசிட்டி திரு.சின்னத்துரை தயாபரன் அவர்கள் (யாழ் பல்கலைக்கழகப் பொறியிலாளர்) பிரமவிருந்தினராகவும், சிறப்புவிருந்தினராக குரும்பசிட்டி ஆசிரியை திருமதி வலன்ரீனா இளங்கோவன் (கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 திருமதி வலன்ரீனா இளங்கோவன் எழுதிய யாழ்ப்பாணத்து நாட்டிய மரபுகள் என்ற நூல் யேர்மனியில் வெற்றிமணியின் 17வது வெளியீடாக வெளிவந்தது.

திருமதி வலன்ரீனா இளங்கோவனின் கலை இலக்கிய ஊடகப்பணிகளைக் கௌரவித்து வெற்றிமணி விருதினை யேர்மனி கம் நகரபிதா வழங்கிக் கௌரவித்தார்.

 
 பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்த சமூகசேவையாளர் திரு.சின்னத்தரை தயாபரன் அவர்களுக்கு வெற்றிமணி விருதினை வைத்தியக் கலாநிதி திருமதி ரோகினி சதீஸ் (தமிழ்நாடு) அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.
 
 விழாவில் காதல் வேகம் என்னும் இசைநிகழ்ச்சிக்கு இசையமைத்து பாடல்களையாத்து பாடிய திரு.சஞ்ஜீவன் சிவகுமாரன் சபையோரின் பாராட்டுதலைப் பெற்றுக்கொண்டார்.
 
 விழா குறித்த நேரத்திற்குத் தொடங்கி, குறித்த நேரத்திற்கு முடித்து புலம்பெயர் நாட்டில் பெயர் பதித்தது.