குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

வயது முதிர்ந்தபின்பும், ஒய்வூதியகாலத்திலும் சமூகநலன்காக்கும் தொண்டை ஊருக்கு அளித்து எங்கள் ஊரில் அழியாத சரித்திரமாக எம்மவர் மனங்களில் கலந்துவிட்ட பல பெரியார்களைக் கொண்ட குரும்பசிட்டி மண்ணில், வாழ்க்கையின் நாளாந்த ஒட்டத்துடன் சமூதாயப்பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு அல்லும் பகலும் அவலமுறும் எம் மக்களுக்கு இன்றய காலகட்டத்தில் பணி புரிபவர்களில் பொறியியலாளர் திரு. சின்னத்துரை தயாபரன் அவர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றார்.. 

இன்பமான வாழ்வை இளந்து நாளும் நடைபெறும் கொடிய யுத்த தாண்டவத்தில் சிக்கி குடிமனையை விட்டு இடம் பெயர்ந்து, நாளும் பொழுதும் அல்லல் உறும் எங்கள் ஊரவருக்கு ஊன்று கோலக நின்று தொண்டு புரிபவர் இந்த உன்னத உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர், தனக்கு கிடைத்த உல்லாச வாழ்வை எம்மவருக்கு சேவை புரிய என தியாகம் செய்த இந்த பொறியியல் வல்லுனரின் மனையளும் கூட ஒரு சமுக சிந்தனை கொண்டு வாழும் வைத்தியகலாநிதி என்று கூறினால் மிகையாகாது. 
 
 நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கும், வறுமையின் கொடிமையால் வாடுகின்ற எம்மவர்களுக்கும் தன்னாலான உதவிகளை என்றும் வழங்கிவரும் இவர் உதவி, ஆலொசனை என தன்னை நாடிவருபவரை இன் முகத்துடன் அழைத்து உதவி புரிபவா,; சமூகநல ஆலொசகராக யாழ் செயலகத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவரது தந்தையாரின் தொழிலுக்கு இன்று செயல் வடிவம் கொடுத்தவர் திரு தயாபரன் அவர்கள். ஊரின் பணிகளுடன் தான் கல்வி கற்ற பாடசாலையின் அபிவிருத்திக்கும்;, மாணவர் நலன்காக்கும் செயற்திட்டங்களுக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கு உதவிக்கரம் நீட்டி என்றும் துணைநிற்பவர். 
 
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியலாளராக பல காலமாகக் கடமைபுரியும் இவர், நாளாந்த தன் பணிகளில் ஒன்றாக நினைத்து தன் ஓய்வு நேரத்தினையே பொதுப் பணிக்கு ஒதுக்கிப் சேவை புரியும் இவர், சமூகப் பணியைத் தனது கடமையென நினைத்துக் காரியமாற்றுகின்றார். நாளும் பொழுதும் வாழ்வா சாவா என உருமாறி உள்ள எங்கள் மண்ணில் அவதியுறும் எம்மவரைத் தேடிச் சென்று உதவி புரியும் அருங்குணம் படைத்தவர் இவர். அகன்ற மனமும், சிறந்த ஆழுமையும், மிகுந்த துணிவும், அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட ஒருவராக காணப்டுகின்ற காரணத்தாலேயதான் இன்றயகாலகட்டத்தில் பொதுநல சேவையில் துணிச்சலுடன் கால்பதித்துள்ளார்.
 
 தன்னலப் புயலில் சாய்ந்து விடாது தருமத்தை என்றுமே மறந்து விடாது எம்மவர் நலனை மனத்தினில் கொண்டு வாழும் உன்னத மனம் படைத்த இவரின் பணி மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.

 

ஆக்கம் மகேசன்மைந்தன்