குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் வாழ்ந்தாலும் தாய்நட்டின் பற்றுக் கொண்டு தம் பங்கை வழங்கிக்கொண்டிருக்கும் எங்கள் ஊரின் மைந்தர்களில் பரந்த சிந்தனையுடனும் தொலை நோக்குடனும் செயற்படும் மதிப்பிற்குரிய சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் தமிழர்தம் மொழி, கலாச்சார, வரலற்றை நூல் வடிவில் ஆவணமாக்கிய பெருமைக்குரியவர். 

குரும்பசிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் தங்கச்சியம்மா தம்பதிகளின் மகனான இவர் பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்தில் தன் ஆரம்பக் கல்வியைக்கற்று உயர்ந்த நிலைக்கு வந்தவர். இவர் தனது பல்கலைக்கழகப் படிப்பை தாய்நாட்டில் நிறைவு செய்தபின் பிரித்தானியாவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டாயக் கணக்காளராகப் பட்டம் பெற்றவராவார். தாய்நாட்டிலும் பின்னர் ஆபிரிக்காவிலும் கடமையாற்றிய பின் உலக வங்கியின் திட்டமிடல் கணக்காளர் நாயகமாக பதவி வகித்து ஒய்வுபெற்றறு கனடா நாட்டில் தற்போது வசித்துவருகின்றார். 
 
 தமிழ் பேசும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றிய பரந்த சிந்தனை கொண்ட இந்த மதிப்புக்குரிய பெரிய மனிதர் ஓய்வு காலத்தை எப்படிக் கையாள்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் அவரால் ஆங்கில மொழியில் எழுதி வெளியிடப்பட்ட சுதந்திர இலங்கையில் தமிழர்கள் என்னும் நூல் சான்று பகர்கின்றது. தொழிலில் தான் ஒரு கணக்காளாராக இருந்தாலும், வரலாறுதான் அவரது உணர்வாக இருந்ததன் வெளிப்பாடே தன்மக்களின் தொன்மை நிரம்பிய சரித்திரத்தை ஆவணமாக்கி, தாய்மண் தெரியமல் தரணியெங்கும் புகழ்பரப்பும் எம் இளையோர்ரையும் பயனடைய செய்ய இந்த உயர்ந்த உள்ளம் எடுத்த முயற்ச்சி பராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். 
 
 மதங்களினால் வேறுபட்டாலும் சுதந்திர இலங்கையின் தமிழ் மொழியைப் பேசும் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கும் இந்த வரலாற்று நாயகன், நீண்டகாலமாக தான் அறிந்த தமிழினத்தின் வரலாற்றுத் தொடர்புகளையும், அன்று முதல் இன்றுவரை தொடராக நடந்த பல சம்பவங்ளையும் தன் அறிவுக்கும், அனுபவத்திற்க்கும் எட்டியதை எங்கள் முன்தந்திருக்கிறேன் என்று கூறும் போது அவரில் தெரிகிறது கற்றவர்களுக்கு உரிய அடக்கம். 
 
 அன்று குருவிக் கூட்டில் வாழ்ந்த நாம் இன்று பூமிப்பந்தில் சிதறி வாழும் நிலைக்கு வந்திருக்கின்றோம், ஆனாலும் எங்கள் தனித்துவ அடையாளத்தை, வியக்கவைக்கும் நுண் அறிவை என்றும் இவ் உலகம் அறிய எங்கள் ஊர் மைந்தர்கள் தொடரணியாகத் தம் பணி ஆற்றுகிறார்கள் என்பதற்கு இந்த பகுத்தறிவாளர், பெருமைக்குரிய மனிதர் சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் உதாரணமாகத்திகழ்கின்றார்.
 
 
 
 ஆக்கம் மகேசன்மைந்தன்