குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

உலகம் முன்னேறும் வேகத்தினால் நாம் அடைந்து வரும் நன்மைகளின் அளவிற்கு மக்களின் வாழ்வில் பலவகைக் குறிக்கீடுகளும்; பெரிய அளவு அழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். இயற்கையின் சீற்றமும் போரின் தாக்கமும் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றது என்பதே இவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் இவற்றுடன் ஒப்பிடும் போது மனிதன் தனது திட்டமற்ற போக்காலும், வரையறையற்ற செயற்பாடுகளாலும் தன்னையே அழித்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் இடரை உண்டுபண்ணுவதால் உலகம் இன்று மாற்ற முடியாத நோய்காவிகளைக் கொண்டுள்ளதுடன்,

இவற்றை எதிர்த்துப் போராட பெரும் பணத்தையும், நேரத்தையும் செலவு செய்கின்றது. இந்தப் போரட்டமானது இடிந்த கட்டிடத்தைக் கட்டிமுடிப்பதோ அல்லது அழிந்த பிரதேசத்தை புதுப்பிப்பதுபோலவோ அன்றி, பல கால ஆராய்ச்சிக்கு உட்பட்ட விடயமாகும். பணமும,; மூலவளமும் மட்டும் இருந்தால் மட்டும் போதாது, சிறந்த மூளைவளமும் இருந்தாலே இந்த அழிவில் இருந்து பெரு வெற்றியை அடைய முடியும்.

இந்த வகையிலேயே இன்று உலகி;ல் பெரிய சவாலாக இருக்கும் HIV என்ற வைரசு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற ஆராய்சியில் பெருமுனைப்பாக உள்ள விஞ்ஞானிகளில் ஒருவர்தான் வைத்திய கலாநிதி. வீரகத்தி ஹரேந்திரா ஆவார். இவர் தாயகத்தில் தனது வைத்திய பட்டப் படிப்பை 27 வருடங்களின் முன் நிறைவுசெய்தவர். அதன்பின பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் மாநிலத்தல் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் FRCP,FRCP படிப்பை விசேட துறையான Genito-Urinary medicine உடன் நிறைவு செய்த பின், இன்று Portsmouth வைத்தியசாலையில் விசேட நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமைபுரியும் இந்தப் வைத்திய கலாநிதி உலகம் எதிர் நோக்கும் பெரிய சவாலுக்காக நாடுகள் பல சென்று தன் பங்களிப்பை செய்து வருகின்றார். 

இந்த பொன் மகனைப் பெற்ற தாய் திருமதி மனேன்மணி வீரகத்தி அவர்கள் ஆரம்பக் கல்வி கற்றது எங்கள் குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயம் ஆகும். இவர் 1948 ஆம் ஆண்டிலே London Matriculation பரீட்சையில் சித்தி எய்தி சிறப்பு பெற்றவர். தந்தையார் காலஞ்சென்ற வீரகத்தி அவர்கள் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளராக நீர்பாசனத் திணைக்களத்திலும், பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக மகாவலி அபிவிருத்தி சபையிலும் கடமை புரிந்தவர். மானிடம் எதிர் நோக்கும் கொடு நோயிலிருந்து உலகைக்காக்க போராட ஒரு உயிரை உருவாக்கிய இந்த உத்தமர்கள் என்றும் பெருமைக்குரியவர்கள். 

வைத்திய கலாநிதி ஹரேந்திரா அவர்கள் 2வருடங்களி;ன் முன் தாயகத்தில் HIV கட்டுப்படுத்தல் என்னும் பொருளில் நடைபெற்ற மகாநாட்டில் உரை நிகழ்த்தி தன் தாய் நாட்டிற்கான பங்களிப்பையும் புரிந்துள்ளார். இவ் ஆராய்ச்சியாளரின் சேவையை அண்மையில் உலகின் முதல் தர வானொலியான லண்டன் பிபிசி வெளிக்கொணர்ந்தது அனைவருக்கும் பெருமை தரும் விடயமாகும். தன் சேவையினால் இவர் வளர்ந்து மேலும் புகழடைய எல்லோரும் வாழ்த்துவோமாக.

 

 - ஆக்கம் :- மகேசன்மைந்தன்