குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

     மிருதங்க சேஸ்திரத்தின் அதிபர் மிருதங்க ஞானவாருதி திரு.வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவன் செல்வன் பிரணவன் குகமூர்த்தியின் கனிஸ்ர மிருதக அரங்கேற்றம் கடந்த 07.12.2007 அன்று ஸ்காபுறோவில் நடைபெற்றது. அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் மண்டபம் நிறைந்த ரசிகர் கூட்டம் அரங்கேற்றத்திற்கு சிறப்பைத்தந்தது. அதிலும் மேலாக பிரணவன் கல்வி பயிலும் பாடசாலையின் அதிபர், உபாஅதிபர், மற்றும் இசைஆசிரியர் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு பிரணவனின் கல்வி மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த திறமைகளை பாராட்டிச்சென்றது அனைவரையும் கவர்ந்த ஒண்றாக இருந்தது.

அத்துடன் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த யோர்க் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தின் தலைவர் திரு.ஆர்மன்ட் அவர்களின் பிரதிநிதியாக வந்து கலந்துகொண்ட. சார்ஜன் வீரப்பன் பொலிஸ்திணைக்களத்தின் சார்பில் பாராட்டுக்களையும் பரிசுப்பொருட்களையும் வழங்கிச்சென்றார். பிரணவனின் அரங்கேற்றத்தின் ஆரம்பத்தில் வரசித்தி விநாயகர் ஆலய சிவஸ்ரீ சோமஸ்க்கந்த குருக்கள் விசேட பூசைகளை நடாத்தினார் நிகழ்ச்சி தொகுப்பினை தமிழழகன் மதியழகன் நடத்த, ஆங்கிலத்தில் பிரணவனின் சகோதரி செல்வி.பிரியங்கா செய்திருந்தார்.

வயதில் மிகக்குறைந்தவராக இருந்தாலும் பிரணவன் கனடாவில் சிரேஸ்ட வயலின் வித்துவானாக திகழும் திரு.ஜெயதேவன் நாயர் அவர்களுக்கு ஒப்ப மிருதங்கம் வாசித்ததும் அவரை குரு வாசுதேவன் இராஜலிங்கம் மற்றும் ஜெயதேவன்நாயர் இருவரோடும் மற்றைய மிருதங்க ஜோதிகள் அனைவரும் நன்கு தட்டிக்கொடுத்து அந்த மிருதங்க விழாவை வெற்றி விழாவாக நடத்த கைகொடுத்தனர்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கவிநாயகர் கந்தவன் அவர்கள் பிரணவனின் பல்துறை சார்ந்த திறமைகளை எடுத்துச்சொல்லி  அவரது குருவினதும் திறமையைப் பாராட்டி அதன் பின் பிரணவனுக்கு கேடயம் ஒண்றையும் வழங்கிக் கெளரவித்தார்.

சிறப்பு விருந்தினர்களின் ஒருவரான உதயன் லோகேந்திரலிங்கம் தனது உரையில் மேடையில் பிரணவனுக்கு அருகில் இருந்தவண்னம் அவரை தனது மானவனாக மட்டுமல்ல தனது குழந்தை போல கவனித்து தாகம் எடுக்கும் போது குளிர்பானம் எடுத்துக்கொடுத்து அத்தோடு சிறுவனான பிரணவன் தும்மிய போது அவருக்கு மூக்கைக்கூட துடைத்து விட்ட காட்சி தனது கண்களில் நீரை மல்கச் செய்ததாக உணர்ச்சி வசப்பட்டவராய் கூறினார்.

மொத்தத்தில் பிரணவனின் இந்த மிருதங்க அரங்கேற்றமானது அனைத்து தரப்பினராலும் பாராட்டப் பட்ட ஒண்றாக இருந்தது.

பிரணவனின் பாடசாலை சார்பாக வந்து கலந்து கொண்ட Principal.Mr.Michael Matt , Vice Principal Mr.Hussein , Musice Teacher Mrs.Pickchall ஆகியோர் நிகழ்ச்சியின் இறுதிவரையிலும் அமர்ந்திருந்து கலா ரசிகர்களாக மாறி கரகோசம் செய்து மகிழ்ந்ததும் மனதைக்கவர்ந்த விடயங்களாகும்.

            பிரணவனின் மிருதங்க வாசிப்புக்கு ஏற்ப அவருக்குரிய பாடல்களை தனது வயலின் மூலம் மிகவும் அவதானமாகவும் நேர்த்தியாகவும் இசைத்து மிருதங்க அரங்கேற்றத்திற்கு சிறப்புச் செய்தார் கலைஞர் ஜெயதேவன் நாயர். இங்கு மற்றுமொரு சிறப்பையும் எடுத்துச் சொல்லவேண்டும். அது என்னவென்றால் வழமையாக மிருதங்க கச்சேரிகளுக்கு பிரதானமாக் பாடல்களே பாடுவார்கள். ஆனால் இங்கு வயலின் இசைக்கருவியை பயன்படுத்தியது திரு. வாசுதேவன் இராஜலிங்கத்தின் துணிச்சலையும் பிரணவனின் தன்னம்பிக்கையையும் காட்டியது.