குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

 குரும்பசிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட செல்வி திவ்யா சிவநேசன் அவர்கள் நாட்டுச் சூழ்நிலை காரணமாகத் தலைநகர் கொழும்பில் வாழ்ந்தாலும் தனது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய கலைஞராக விளங்குகின்றார். இவர் நடனம், மிருதங்கம், சங்கீதம் வயலின் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர். இது தவிர எழுத்து வல்லமையும் உடையவர்.

கலைஞர்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்’
லண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தில்....
நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.


‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’

என்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள், லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன்; அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதமர்;

குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலத்தில் கடந்த 03.07.2012 காலை 9.00 மணிக்கு வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சு சிவகுமாரனின் மணிவிழா அம்பாள் பூஜையுடன் ஆரம்பமானது.

மேற்படி விழா காலநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினர்களாக திரு.இளங்கோவன் ஆளுனரின் செயலாளர் வட மாகாணம்) பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா

குரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர் ஆ.சி.நடராஜா  அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் வெளியீடு கடந்த 21.12.2011. புதன்கிழமை உரும்பிராய் காளிகோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

குடாநாட்டில் உள்ள பாடசாலைகள் யாவற்றிற்கும் இலவசமாக இந்நூல் வழங்கப்படுகின்றது. இந்த அரிய நூலினை வெற்றிமணி பத்தரிகை தனது 19 வது வெளியீடாக வெளி யிட்டுள்ளது.
புத்தகத்துடன் குழந்தைகள் பாடல்களை இலகுவாகப் பாடிப் பழக வசதியாக ஒலிப்பேழையும் இணைக்கப்பட்டுள்ளது.

அமரர் ஆ.சி.நடராஜா ஆசிரியரிற்க்கு 25.12.2011 லண்டன் வாழ் குரும்பசிட்டி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. (புகைப்படங்கள் இணைப்பு)

அஞ்சலி நிகழ்வின் ஆரம்பமாக அமரர் அவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலிப்பிரார்த்தனை செய்து அவரின் ஆத்மசாந்திக்காக வேண்டி தேவாரமும் இசைக்கப்பட்டதுடன் திருவுருவ படத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி தீப ஆராதனையுடன் அஞ்சலி அமர்வு ஆரம்பமானது.

தொடர்ந்து அமரர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும், அவர் தொடர்பான நினைவுகளும் மீட்டு உரையாடப்பட்டது.

குரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் 18.12.11 ஞாயிற்றுக்கிழமை பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடத்திய அஞ்சலி நிகழ்வுகளின் படத்தொகுப்பு.

புகைப்படங்கள்

தகவல்: யாழ்.வெற்றிமணி.

எங்கள் குரும்பசிட்டிக் கிராமமக்கள் அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான சமூகசேவையாளர் மறைந்த ஆசி.நடராசா அவர்களுக்கான அமரத்துவ அஞ்சலி அமர்வொன்று கடந்த 4 ம் திகதி ஞாயிறன்று கனடா, ரொறன்ரோவில் நடைபெற்றது. கனடிய குரும்பசிட்டி நலன்புரிச்சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வானது, அன்னாரின் ஆத்மசாந்திக்கான வேண்டுதலாகக் கணிப்பிடப்பட்டது எனலாம். எங்கள் ஊர்மக்கள் மாத்திரமல்லாது அயலூர்க் கிராம மக்களும் பிரதிநிதித்துவம் செய்து அமரரின் சேவைகளை வியந்துபோற்றியது அவருக்குக்கிடைத்த ஆத்மசாந்தி என்பதில் ஐயமில்லை.

குரும்பசிட்டி மீள்  எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா ஆவர்களுக்கு கடந்த 03.12.2011 அன்று யேர்மனியில்  டோட்மூண்ட் நகரில் ஓர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வினை குரும்பசிட்டி மக்கள் மற்றும் வெற்றிமணி பத்திரிகை, சிவத்மிழ் சஞ்சிகையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 

சரியாக மதியம் ஒரு  மணிக்கு அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் மருமகள் திருமதி கடம்பேஸ்வரி தங்கராஜா அமரரின் திரு உருவப் படத்திற்கு குத்துவிளக்கினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். 

10.11.2011 அன்று வியாழக்கிழமை ஒரு பௌர்ணமி தினத்தில் வவுனியா நகர சபை மண்டபத்தில் குரும்பையூர் கவிஞன் தம்பித்துரை ஐங்கரனின் அமாவாசை நிலவு கவிதைத் தொகுதி அறிமுகமானது. அபிராமி பட்டர் தான் அமாவாசையில் நிலவைக் காட்டியவர் ஐங்கரனுமா? (படங்கள் இணைப்பு)

முதலில் விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் விழா விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியை திருமதி ஜெகநாதன்; அவர்களின் மனம் உருக வைக்கும் இனிமையான தழிழ்த்தாய் வாழ்த்துடன் மிக பிரகாசமானது.

 குரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா அவர்களுக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு படங்கள்

குரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும் அல்லது ப்டத்தொகுப்புகள் பக்கம் பார்வையிடவும்

செதுக்கிய சிற்பத்திற்கு தம்பித்துரை, வெண்கட்டி சித்திரத்துக்கு செந்திநாயகம், தூரிகையால் கொடித் துணிக்கு உயிர் கொடுக்கும் சுப்பிரமணியம், நவீன வர்ணக்கலைக்கு சிவகுமாரன் என்று நீண்டு செல்லும் பட்டியலில் எங்கள் ஊரின் பெயர் வாழ குரும்பசிட்டியர்களின் வழத்தோன்றலாக இன்று சித்திரக்கலையில் முத்திரை பதிக்கும் கலைஞன் தீனபந்து கிருபாகரன் ஒப்பற்ற ஒரு கலைஞனாக இன்று பலகோடி கலைஞர்கள் வாழும் கலை பிறந்த தமிழ் நாட்டில் சாதனை புரிந்து வருவதைக் காணும் போது எம்மவர் எங்கு வாழ்ந்தாலும் தம் திறமையை வெளிக்காட்டுவதில் என்றும் பின் நிற்பதில்லை என்பது கண்கூடு.

குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மனின் மகோற்சவ மாதமாகிய மார்கழியில் தேர்த்திருவிழா நாளாகிய 21.12.2010 அன்று திருவெம்பாவை வழிபாடும் தேர்த்திருவிழா வழிபாடும் உரும்பிராய் காளி அம்மன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

தற்காப்பு கலைகளில் மிக முக்கி பங்கை வகிக்கும் கராட்டிக்கலையானது யப்பானிய ரியூக்யுத் தீவுகளில் ஆரம்பித்து இன்று உலகின் எல்லா நாடுகளிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோராலும் பயிலப்பட்டு வரும் கலையாகும். சீரிய செயன் முறை வடிவங்களையும் ஒழுக்க கோட்பாடுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தற்காப்பு முறையானது தன்னை தாக்கவருபவர்களைத் தடுக்கும்