குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

அதிபர் மு.க.சுப்பிரமணியம அவர்களை இளமையிலேயே எனக்கு நன்கு தெரியும். இந்த ஊரில் மிகப்பிரபல ஆசிரியராகவிருந்த திரு வ.பொன்னுக்குமாரு அவர்களிட கரப்பந்தாட்டம் பயின்று திறமையான கரப்பந்தாட்ட வீரராக திகழ்ந்தார். அப்போது இவரிடம் தலமைக்கு வேண்டிய பணிவு, கூட்டுறவு உணர்ச்சி, கட்டுப்பாடு, சுத்தம் என்பவை இருப்பதைக்கண்டேன்.

வியாபாரம் பணம் சம்பாதிக்கவும், விளம்பரத்திற்க்கும். முதலீட்டுக்கும் பயன்படும் இக்காலத்தில், பிறக்கும் போதே பெரும் செல்வந்தராகப்பிறந்து தன்வாழ் நாளில் பெரும் இன்னல்களையெல்லாம் சந்தித்தும் இறப்பிலும் இலட்சியம் தளராத ஒரு ராஜாவாக வாழ்ந்தவர். எமது மண்ணின் மைந்தன் பூ. சு நடராஜா.அவர்கள்.

வெள்ளை உடையும் வீபூதி தரித்த நெற்றியுடனும் எமது கிராமத்தில் பலரைப் பார்த்து இருக்கின்றோம். அவர்களில் தெய்வீக உருவில் ஆலயங்களில் காணப்படுபவர்களில் திரு. இளையதம்பி அவர்களும் ஒருவர். இவர் ஒரு இளைப்பாறிய அரசாங்க தபால் அதிகாரி. ஆனால் நாமெல்லாம் அவரை ஒரு சமாதான நீதிபதியாகவே அறிந்திருக்கிறோம்.

ஈழத்திலும் யாழ்ப்பாணத்திலும் எமது ஊரை முதன் முதற் பிரகாசிக்கச் செய்தவர்களில் முதல் வைத்து எண்ணத்தக்கவர்கள் நல்லையா சகோதரர்கள். அவர்களில்; மூத்தவர் திரு ரி.ஆர்.நல்லையா ( துரைரத்தினம்) இளையவர் திரு.ஆர்.ஆர் நல்லையா (இராசரத்தினம்) இவர்கள் பாடசாலைப் பருவத்திலேயே விளையாட்டுத்துறையிற் சாதனை படைத்தவர்கள்.

நீர்வள நிலங்களாற் சிறந்ததும், தேவாலய மடாலயங்களாற் பொலிந்ததும், அரசகேசரி, ஆறுகநாவலர்,சபாபதி நாவல்கர், குமாரசாமி புலவர் முதலிய கல்வியு முருமெனத் திகழ்தருஉம் செந்தமிழ் வாணரும், மைந்தமிழ் கழகமும், பன்மரக்காவும், தண்மலர்ச்சோலையும் பாங்குடனமைந்து,

கவிஞர் சோ.தியாகராசன் அவர்களது மேற்படி கவிதை ஈழகேசரி நா.பொன்னையா அவர்களை ஓரளவு படப்பிடித்துக் காட்டுகிறது. "போலிச் சரக்கல்ல ஆண்மையில் வாழ்ந்த பொன்னையா வள்ளல்" என்ற தொடரை கவிஞர் சரியானபடி போட்டிருக்கிறார். அட்சரலட்சணம் பெறும் அந்தத் தொடர் ஆணித்தரமானது அர்த்புச்ஜ்டியுள்ளது.

இலங்கயின் சிரசுத் தானம் என விளங்கும் யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டி என்னும் ஊர் வள்ளுவர் வாக்குக்கு இணங்க சகல செல்வங்களும் பொருந்திய பதியாகும். அம்பாள் ஆலயத்திற்கு அண்லையில் விக்கினம் தீர்க்கும் விநாயகர் ஆலயம் அமையப்பெற்றதும்,  கலைகள் பயிற்றுவிக்கும்

ஈழத்து இலக்கியவானில் இணையற்றபிரகாசத்துடன் விளங்கிய ஒருநட்சத்திர எழுத்தாளர் திரு.கனகசெந்திநாதன். ஈழநாடு,  ஈழத்து எழுத்தாளர், ஈழத்து கனகசபை பொன்னம்மா தம்பதிகளின் புத்திரராய் பிறந்த இவரதது இயற் பெயர் செவ்வேழ் என்பதாகும்.

மாத்தளை சென்தோமஸ் கல்லூரியிலும் பின் வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்திலும் ஆசிரியப்பணி செய்த கந்தவனம் அவர்கள் அளவெட்டி அருணோதாயாக்கல்லூரியில் சிலகாலம் அதிபராக இருந்து பின் நைஜீரியா சென்று தற்போது கனடாவில் வசிக்கின்றார்.

ஈழத்தமிழகத்தில் வாழ்ந்த முதுபெரும் நாடகக்லைஞர்களுள் ஒருவர் A.T.பொன்னுத்துரை அவர்கள் இவரது கலைச்சேவையைப் பாராட்டி 1999ல் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கலாபூசனம் விருது வழங்கி கெளரவித்தது.