குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

வியாபாரம் பணம் சம்பாதிக்கவும், விளம்பரத்திற்க்கும். முதலீட்டுக்கும் பயன்படும் இக்காலத்தில், பிறக்கும் போதே பெரும் செல்வந்தராகப்பிறந்து தன்வாழ் நாளில் பெரும் இன்னல்களையெல்லாம் சந்தித்தும் இறப்பிலும் இலட்சியம் தளராத ஒரு ராஜாவாக வாழ்ந்தவர். எமது மண்ணின் மைந்தன் பூ. சு நடராஜா.அவர்கள்.

 யாழ் மண்ணில் பிறந்தும் இலங்கையின் தென்பகுதியில் பெரிதும் மதிக்கப்பட்டவர். தனது வியாபாரத்தலங்களின் ஊடாக இவர் பல அமைச்சர்கள் முதல் அரசியல் வாதிகள் வரை நெருங்கிய நட்பைப் பேணியபோதும் அரசியலுக்குள் நுளையாதவர். விளம்பரம் என்பது இவருக்கு தேவையற்றது ஒன்று. இவரையறியாதவர் எமது ஊரில் இல்லை எனலாம். 

வியாபாரமே தொழிலக இருந்தும் இவர் கற்றுத் தெளிந்த ஒரு கனவான் எந்த ஒரு கருவை எடுத்துக் கொண்டாலும் அதைப்பற்றி நீண்ட நேரம் தொடர்ந்து உரையாடக் கூடியவர். ஆனால் எந்த மேடையிலும் இவர் பேசியதைக் கண்டதேயில்லை. மும் மொழிகளிலலும் சிறந்த தேர்சிபெற்று விளங்கிய இவர் எவரையும் இலகுவில் அணுகும் வல்லமை படைத்தவர்.1977 இனக்கலவரத்தினால் தனக்கும் தனது இனத்துக்கும் ஏற்பட்ட இன்லை எடுத்துரைக்க அன்று அமைக்கப்பட்ட “சன்சோணி ஆணைக்குழு” முன் தோன்றி சாட்சியம் அளித்து ஆற்றிய உரை இலங்கையின் ஏரிக்கரைப் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. 

பணம் படைத்த இந்த பெரும்தகை அதனால் வரும் மமதை அற்றவர். எளிமையாகக் காணப்படும் இவர் பல வாகனங்களிற்கு உரித்ததுடையவர், ஆனால் ஊரில் துவிச்சக்கரவண்டியில் சவாரி செய்பவர். “இருப்பதை வைத்து சிறப்பாக பணி செய்” என்பதை அடிக்கடி சொல்வார். எமது மண்ணிற்கும் மக்களுக்கும் இவர் ஆற்றிய சேவைகள் ஏராளம் ஆனால் எதையும் விளம்பரப்படுத்தாது பார்த்துக் கொண்டார். அடுத்தவர்க்கு உதவ அடுத்த கணமே சென்றுவிடுவார். 

கல்விக்காக எமது ஊர் மக்களுக்கு அரும்பணியாற்றிவர் பொது நல அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கி மக்களுக்கு சேவை புரிந்த இந்த வள்ளல் சைவசமயம் வளர ஆற்றிய சேவை அளப்பரியது. எமது ஊரில் அம்மனுக்குத் தேரும். கந்தனுக்கு கோயிலும் அமைத்து திருப்பணியாற்றியவர். மேலும் பல சிறிய ஆலயங்களை நிர்வாகித்தவர். அந்தணர்க்கு வாழ்வுக்கு வழிசமைத்தவர், நீண்ட தொலைநோக்கு கொண்ட இவர். எந்த காரியத்தில் இறங்கினாலும் அதன் நீண்ட கால பராமரிப்புக்த் தேவையான அனைத்தையும் செய்த பின்னரே அதில் இருந்து ஒய்வெடுப்பார். 

 எவரும் இலகுவாக அணுகக்கூடியவர். எது உகந்தது என்பதை அறிந்து அதன்படி நடக்ககற்றுக் கொடுப்பவர். தனக்கு ஏற்பட்ட இன்னல்களினால் எமது மண்ணைவிட்டு எங்கும் நகரமாட்டேன் என்ற இலட்சியத்துடன் வாழ்ந்த இந்த உத்தமர் நினைத்திருந்தால் தனி விமானத்தில் பறந்து வேறு இடம் சென்றிருக்க முடியும். அபாயம் அருகில் அருகி வருகிறது எனத்தெரிந்தும் தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து இறுதிவரை மாறது யாழ் குடா நாட்டிலேய தன் வாழ்வை நிறைவுசெய்த இந்த பண்பாளர்; எம்கிராமத்தின் அணையாவிளக்குகளில் ஒன்று. 
 


ஆக்கம் :- மகேசன்மைந்தன் -