குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

நீர்வள நிலங்களாற் சிறந்ததும், தேவாலய மடாலயங்களாற் பொலிந்ததும், அரசகேசரி, ஆறுகநாவலர்,சபாபதி நாவல்கர், குமாரசாமி புலவர் முதலிய கல்வியு முருமெனத் திகழ்தருஉம் செந்தமிழ் வாணரும், மைந்தமிழ் கழகமும், பன்மரக்காவும், தண்மலர்ச்சோலையும் பாங்குடனமைந்து,

 

பார்ப்போர் மனது பரவசம் கொள்ளும் பரனனாலயமுதற் பல்லாலயங்களும் சீர்பெறவமைத்து திகழ்வதுஉம் சீரானமைந்த ஏராளுவோர், சிற்பர், ஓவியர், கைவினையாளர், கவின் பெறு வணிகர், அற்பக நிறைந்த அருந்தன வான்கள் பொற்புற அமைந்த நற்பெரும் பதியெனத் திகழ்வதுஉம் நன்னயம் படைத்த மின்னயார்கள் சொன்னயம் பயிலும் மன்னிர சிறப்பின் தென்மயிலைப்பதி தொன்நெறிவழாது மன்னுக வென்றே பன்னருந்தவத்தான் சோமநாத முதலியார் வழிவரூஉம் நன்னித்தம்பியும் தெய்வானையம்மையும் பன்னிய தவத்தால் துன்மதி ஆண்டு ஆவணித்திங்கள் உத்தரட்டாதியில் மன்னிய சிறப்பின் சின்னத்தம்பியார் மாண்புறவுதித்தனர்.

    இவர்: மாப்பணர், கனக்ர், தாமோதரம், சீனிக்குட்டியார் என்னும் நால்வரையும் சகோதரர்களாகவும், ஆசப்பிள்ளை என்பவரைச் சகோதரியாகவும் பெற்றுள்ளார். தக்க வயதிலே கல்வி பயிற்றப் பெற்று பிறதேச சஞ்சாரியாய்ப் பல துறைகளிலுமனுபவம் பெற்று, இயற்கையற்விற் சிறந்தவராய் சிறிது காலம் ஓர் தமிழாசிரியராய்விளங்கினார்.

     ஆண்டு இருபத்தைந்தாயதும், இவரது குலத்திற்கும் நலத்திற்கும் ஒப்பவாய்ந்த நாவற்குழி சங்கரப்பிள்ளை என்பவரின் திருமகளார் தெய்வானைப்பிள்ளை யென்பவரைமண்ந்து, இல்லறம் நடத்துவான். தமது சொந்த ஊராகும் மயிலிட்டி தெற்கிலமர்ந்து வியாபரத்துறையிற் புகுந்து பெரும்பொருள் திரட்டலாயினர்.

  இவர் சயபக்தி, தேசபக்திமுதலியவற்றிற் சிறந்து அறநெறி வழாது ஒழுகியமைபாற், கிராமவாசிகளாலும் ஏனையோராலும் நன்கு மதிக்கப் பெற்றவராய்க் கிராமவாசிகளுக்கு வேண்டிய காலங்களில் பெரும்பொருள் கொடுத்து வாங்கியும், மக்களிடையே உண்டாகும்பிணக்கு முதலிய வற்றை நீதி வழுவாது நடுவுரைத்தும் கிராமத்தலைவராய் விளங்கினதுமன்றி, கிராமசங்கந் தோன்றிய காலம் முதல் சங்க அங்கத்தவராய் விளங்கினார்.

     இவர் சமய பக்தி மேலீட்டினாலே தலயாத்திரை செய்வான் விரும்பி, தமது வாழ்க்கைத்துணவியாரையு முடன்கொண்டு சேது முதற் காசீயீறாகவுள்ள பல தலங்களையும் தரிசித்தபின், இந்தியாவிலே சிறந்ததலமாகிய வேதாரணிய மென்னும் திருமறைக் காட்டிலே ஓர் சத்திரமமைத்து அன்னதானம் முத்லியவற்றிற்க்காக மூலதமுதவியுள்ளார். வேதவன் ஆதீனத்திலிருந்து ஓர் சைவாசாரியரை வருவித்துத் தமது கிராமத்திலே சகல வரிசைகளுடன் பரம்பரையாக இன்றளவும் நிலைபெறச் செய்தனர்.

   மாவையம் பதியிலே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கலியுக வரதனாம் கந்தக் கடவுளினாலயத் திருமுடியை பசும் பொன்னாலாக்கி அளித்து அற்றைத்தினப் பூசைகளுக்கும் மூலதன மீந்துள்ளார்.குரும்பசிட்டியில் புராதானமாயமைந்து சீரற்று விழங்கிய விநாயகராலயத்தைத் தமது சொந்தப் பொருள் கொண்டு நவமாயியற்று வித்துப் பதினையாயிரம் ரூபாய்கள் பெறக்கூடிய தமது ஆஸ்த்திகளையும் வருங்காலத்தில் ஆலயங்கள் நடைபெறுவதற்க்காக ஓர் பஞ்சாயத்தையும் நியமித்து வேண்டிய ஒழுங்குகளும் முன்னரே செய்துவைத்துள்ளார்.

     இவர் தேசபக்தி முதிர்ச்சியால் குரும்பசிட்டியிற் பிரபலமுற்று விளங்கும் "மகாதேவ வித்தியாசாலை" க் காரிய கருத்தாவாவும், சைவ வாலிப சங்கத்தின் போஷகராகவும் பல்லாண்டுகளாகத் தொண்டாற்றி, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் மற்றோரும் களிக்குமாறு செய்தனர். இவரது சமய பக்தியும், தேச பக்தியும், சீவகாருண்யமும், பரோபகாரமும் எத்துணையென்பது நாம் கூறாதபோதரும்.

  இவர் புத்திர பேறில்லாதிருந்தும் "சுற்றத்திற்கழகு சூழவிருத்தல்" என்னும் மூதூரைக்கிணங்கத் தமது சகோதரர்களின் புதல்வர்களையும் உடன் வைத்துப் போஷித்தும், கல்வியூட்டியும், ஏற்றகாலத்தி மணவினை முதலியன ஆற்றுவித்தும், தமது செல்வத்தின் பெரும் பாகத்தை "செல்வார்க்கழகு செழுங்கிளை தாங்குதல்" என்னும் முன்னோர் மொழிப்படி, இன்னாரின்னார்க்கே உரியதாகுவெனச் சாதனஞ் செய்தும் உள்ளார்.

  இவ்வாறாகிய செயற்கருஞ் செயல்களினால் தேச மக்களின் உள்ளத்திற் பிணிப்புண்டு, எல்லோராலும் நன்கு பாராட்டப்பெற்ற திருவாளர் சின்னத்தம்பி, தமது எழுபதாம் வயதில் பிரசோத்பத்தி ஆண்டு கன்னித்திங்கள் இருபானோன்பதிற் குருவாரத்திற் சதுர்த்தசித்திதியும் அனுஷ நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் உற்றார், உறவினர், உஅரு துணையாளர் உளமிகுந்திருகப் பற்றோன்றில்லாப் பரம்பொருளிணையடி பெற்றனனினிதே!  பெற்றனனினிதே!

   அந்தோ! தென்மையிலைவாசிகள் ஒரு சமயாபிமானியை, ஒரு தேசபிமானியை,ஒரு நீதியாளரை, ஒரு தர்ம சீலரை,ஒரு குணக்குன்றாஇ இழந்துவிட்டனர்.எனவே!"ஊள்ற் பெருவலி யாவுள மற்றொன்று ,சூழினுந்தான் முந்துறும்" என்றபடி ஆயிற்றே. இப்பெரியாரது ஆன்மா சாந்தியடைவதாக.