குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

இலங்கயின் சிரசுத் தானம் என விளங்கும் யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டி என்னும் ஊர் வள்ளுவர் வாக்குக்கு இணங்க சகல செல்வங்களும் பொருந்திய பதியாகும். அம்பாள் ஆலயத்திற்கு அண்லையில் விக்கினம் தீர்க்கும் விநாயகர் ஆலயம் அமையப்பெற்றதும்,  கலைகள் பயிற்றுவிக்கும்

பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம் கிராமப் பண்பாட்டினைப் பறை சாற்றும் நிறுவனமாக அமையப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. சைவச்சான்றோர்கள், தமிழபிமானிகள், எழுத்தாளர்கள், கலைஞ்ர்கள்,  செழுங்கிளை தாங்கும் செல்வர்கள், திறமைமிக்க விவசாயிகள், வணிகர்கள், பல்துறை வல்லுநர்கள் வாழும் பெருமைக்குரிய இடம் குரும்பசிட்டி கிராமம். இக் கிராமத்திலே உயர் வேளாளமரபிலே உதித்த சீனித்தம்பி ஆறுமுகம் / பூரணம் தம்பதியினருக்கு இரண்டாவது புத்திரனாக மகாதேவன் அவர்கள் 1947ம் ஆண்டு ஜப்பசி மாதம் 19ம் திகதி பிறந்தார்.

  மகாதேவன் அவர்கள் தனது ஆரம்பக் கல்லியைக் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாலயத்தில் (பொன்பரமானந்தர் மகாவித்தியாலம்) பெற்றுக்கொண்டார். இவரது தந்தயார் விவசாயியாக இருந்த போதும் தனது  பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் அமரர் மகாதேவனும் அவரது சகோதரர்களும் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்குகின்ற யூனியன் கல்லூரியில் தமது கல்வியைத்தொடர்ந்தனர். பின்னர் மகாதேவன் அவர்கள் தமது உயர் கல்வியை மகாஜனாக்கல்லூரியில் பூர்த்தியாக்கி, 1968ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்து, 1970 ல் விஞ்ஞான பட்டதாரிப் படிப்பை(B.Sc) முடித்துக்கொண்டார்

  1972ல் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் திக்குவெல்ல என்ற கிராமத்தில் மின்ஹாத் முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் பட்டதார் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.இச்சேவையாற்றிக் கொண்டிருக்கும் போது 1974ம் ஆண்டு குரும்பசிட்டியைச்சேர்ந்த தனது மாமனார் முறையான குணரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ர புத்திரி மங்களராணி அவர்களைக் கரம் பிடித்தார். அவர் பேரதனை பல்கலைக்கழக கலைப்பட்டதாரி ஆவார். இருவரும் இணைந்து திக்குவெல்லையில் வாழும் காலத்தில், கதிர்காமம் போன்ற திருத்தலங்களைத் தருசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

  1977ல் அனுரதபுரம் விவேகானந்தா தமிழ்  மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகித் தனது துணைவியாருடன் ஒரே பாடசாலையில் சேவையாற்றினார். 1979ல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி மானிப் பட்டம் பெற்றதன் பின்னர் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் இரண்டு வருடங்கள் சேவையாற்றினார். அமரர் மகாதேவன் தனது சொந்த இடமான யாழ்ப்பாண மண்ணை நேசித்ததனால் அங்கு சேவையாற்ற விரும்பினார். இன்று தேசிய பாடசாலையாக விளங்கும் யாழ்/ இந்துக்கல்லூரியில் 1982ல் தனது சேவையை ஆரம்பித்து ஏறத்தாள பத்து ஆண்டுகள் சேவையாற்றினார். இக்காலப்பகுதியில் கல்லூரி அதிபராக விளங்கிய திரு எஸ்.பொன்னம்பலம் மற்றும் சக ஆசிரியர்களுடன் அன்பாகப் பழகினார். மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்க்காக அயராது உழைத்ததுடன், மாணவர்களிடையே நன்மதிப்புப் பெற்ற ஒருவர் எனக் கூறின் மிகையாகாது. இப்பாடசாலையின் ஊடாக மருத்துவர், பொறியியலாளர்,  விஞ்ஞான, கணிதப் பட்டதாரிகளை உருவாக்கி மகிழ்ந்தார்.

  1991ம் ஆண்டு பங்குனி மாதம் பதவி உயர்வு பெற்று பலாலி ஆசிரிய கலாச்சாலையில் தனது பணியைத்தொடர்ந்தார். விஞ்ஞான ஆசிரிய மாணவருக்கு மாத்திரமன்றி ஏனையோருக்கும் வழிகாட்டியாக விளங்கியதுடன், அவர்களின் உயர்வுக்காக இறுதிவரை அயராது உழைத்து, அவர்களுடன் அன்பாகப் பழகித் தனது பிள்ளைகள் போல உறவாடினார். இன்றும் அவரது இழப்பைத் தாங்கமுடியாது தவிக்கும் உள்ளங்கள் பல.

ஆசிரிய கலாச்சாலையில் சேவையாற்றிக்கொண்டிருக்கும் போது அண்மையில் S.L.E.A.S.III தராதரத்தையும் பெற்றுக்கொண்டார். இதனால் அவர் மிக மகிழ்ந்து தனது மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.   சகோதரரர்களின் பிள்ளைகளை தனது பிள்ளைச் செல்வங்களாக்கி மகிழ்ந்தார்.

  அரச சேவையில் இருந்தும், மாணவச்செல்வங்களின் நலன் கருதி யாழ் மண்ணில் புகழ் பூத்து விளங்கும் கன்னாதிட்டியில் உள்ள புதிய விஞ்ஞானக் கல்விக் கழகத்தில் தனது சேவயை வழங்கனார். மாணவர்களைத் தனது பிள்ளைகளாக்கி ஏழ்மையில் வாடிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு சகல வழிகளிலும் உதவிய பெருமகன் இவர்.

 முழுமையான, மனநிறைவான வாழ்வை அமைதியாக களித்துவரும் நாளில், திடீரென பீடித்த மாற்ர முடியாத நோயினால் 02.01.2002ல் இறையடி சேர்ந்தார்.