Print
Category: கிராமப்பெரியார்கள்
Hits: 1968

ஈழத்து இலக்கியவானில் இணையற்றபிரகாசத்துடன் விளங்கிய ஒருநட்சத்திர எழுத்தாளர் திரு.கனகசெந்திநாதன். ஈழநாடு,  ஈழத்து எழுத்தாளர், ஈழத்து கனகசபை பொன்னம்மா தம்பதிகளின் புத்திரராய் பிறந்த இவரதது இயற் பெயர் செவ்வேழ் என்பதாகும்.

 தனது எழுத்துலகப் பெயராகப் கனகசெந்திநாதன் என இவர் மாற்றிக்கொண்டார். முதலில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும் பின் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கற்றார்; 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆரிரிய கலாச்சாலையில் பயிற்சிபெற்று வெளியேறினார்; பண்டிதமணி C.கணபதிப்பிளையின் முதன்மையான மாணவன் என்ற பெருமைக்குரியவராகக் காணப்பட்டார்.

    கிராமச் சூழலில் பிறந்து, இளமையிற் தந்தையை இழந்து, வறுமையில் வாடிக் கடின உழைப்பில் ஆசிரியராக வந்த ஒருவர் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பாரா அல்லது எவ்வித ஊதியமுமில்லாத எழுத்துத் துறைக்கு வருவாரா; இந்த இடத்திலே தான் இரசிகமணியை வாசகர்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்; எழுத்துலகில் சில காரியங்களைத் தமிழை மட்டும் கற்ற தன்னாலும் சாதிக்க முடியும் என்று துனிந்தார். அதற்காக அவர் தன் சிறிய ஊதியதின் பெரும் பங்கைப் புத்தகங்கள், பத்திரிகைகள், விசேடமலர்கள் என்பவற்றை வாங்குவதிற் செலவிட்டார். ஓயாது வாசித்துக்கொண்டேயிருப்பார். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறை ஆற்றல் கொணட படப்பாளியாக எழுச்சி கொண்டார். தன்னைப்போல் ஈழத்து எழுத்தாளர் பலரை எழுச்சி பெற வத்தார் தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கு ஈழத்து எழுத்தாளர்கள் எவ்வகையிலும் குறைந்தவர்கள் அல்லர் என்ற தன்னம்பிக்கையை ஊட்டி, அவர்களை உற்சாகப்படுத்திய பெருமைக்குரியவர். ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதி பெரும் பங்கு ஆர்றினார்.

       இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த சமூக சேவகர் ஆகவும் விளங்கினார். குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் முக்கிய பதவிகளை வகித்துப் பல சேவைகளையும் செய்துள்ளார். அம்பாள் ஆலய உற்சவ காலங்களில் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றினார். தமது இறுதி காலம் வரை எழுத்துலகை மறவாதிருந்தார். ஈழகேசரி பத்திகை இவரது எழுத்துலக பயிற்சிக்கு களமமைத்து கொடுத்தது. திருமகள் அழுத்தகத்தின் மூலம் வெளியிடப்படட பாடல் நூல்கள் பலவற்றையும் எழுதினார். ஈழகேசரி நா.பொன்னையாவிடம் நீங்காத பற்றுடய இவர் என்றும் கிராமபிமானம் உடையவராக விளங்கினார். இரசிக மணி 25 சிறு கதைகளையும் 4  நாவல்களையும் 12 நாடகங்களையும் எழுதியுள்ளார். அவற்றோடு அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை ருஷ்ய மொழியில் மொழிபேர்க்கப்பட்டது. 1964ல் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டத்தையும், 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் "இலக்கிய செல்வர்" என்றபட்டத்தையும் இவருக்கு வழங்கி கெளரவித்தன.