குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

மாத்தளை சென்தோமஸ் கல்லூரியிலும் பின் வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்திலும் ஆசிரியப்பணி செய்த கந்தவனம் அவர்கள் அளவெட்டி அருணோதாயாக்கல்லூரியில் சிலகாலம் அதிபராக இருந்து பின் நைஜீரியா சென்று தற்போது கனடாவில் வசிக்கின்றார்.

 குரும்பசிட்டியில் தனது வாழ்க்கைத்துணையை தேடிக்கொண்ட கவிஞர் அவர்கள் இங்கு வாழ்ந்தகாலத்திலேயே ஒரு தனித்துவமான கவிஞராக எழுச்சிகொண்டு இக்கிராமத்துக்கு பெரும் புகழைதேடித்தந்தார். அவரது சொந்த இடம் குரும்பசிட்டி என்றே கருதியதுண்டு.

      இங்கு வாழ்ந்தகாலத்தில் கந்தவனமின்றி கவி அரங்குகள் இல்லை என்று சொல்லுமளவிற்கு செயற்ப்பட்டு எல்லா அரங்குகளையும் ஆக்கிரமித்தார். சிறந்த சொற்கட்டும், பொருள் பொதிந்த சந்தச் சுவையும் ஆழமான கருத்துக்களும் கொண்ட அவரது கவிதைகள் சாமானியரையும் களிப்புறவைத்தன,அறிஞர்களின் சிந்தனையக் கிழறினார். கவிதை எழுதுவதில் மட்டுமல்ல, சிறுகதை, நாடகம், ஆய்வுகட்டுரைகள், பாடல்நூல்கள் எழுதுவதிலும் வல்லவராக காணப்பட்டார். இதுவரையில் 23 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

 கந்வனம் அவர்கள் கவியரங்குகள் மட்டுமல்ல, விவாத அரங்குகளிலும், சமய சொற்பொழிவுகளிலும் தனிமுத்திரை பொறித்தவர்; சிறந்த நடிகரும் ஆவார் குரும்பசிட்டியின் பொதுவாழ்வில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் பல வழிகளிலும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராக இவர் விளங்கிய போது அவ்வமைப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்ததனை எவரும் எழிதில் மறந்துவிட முடியாது.

    தற்போது கனடாவில் வாழும் கந்தவனம் அவர்கள் அங்கும் சளைக்காது தமிழ்த்தொண்டு, சமயத்தொண்டுகளை ஆற்றிவருகிறார். தமிழ் மொழியின் செழுமைக்கும் வலிமைக்கும் பங்களிப்புசெய்யு அன்னாரின் பணிகள் என்றும் நிலைக்கக்கூடியவை.