குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

ஈழத்தமிழகத்தில் வாழ்ந்த முதுபெரும் நாடகக்லைஞர்களுள் ஒருவர் A.T.பொன்னுத்துரை அவர்கள் இவரது கலைச்சேவையைப் பாராட்டி 1999ல் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கலாபூசனம் விருது வழங்கி கெளரவித்தது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான ஈழத்தின் நாடகத்துறை வளர்ச்சியில் இவர் இரண்டறக்கலந்து வந்துள்ளார்.

  நாடகப்பிரதி எழுதுதல், நாடகங்களைத் தயாரித்தல், இயக்குதல், நடித்தல், நாடகம் பற்றிய ஆய்வுரைகள் நிகழ்த்துதல், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுதல், நவீன நாடக முறைகளை உள் வாங்குதல் நடிப்புத்துறையில் புதிய உக்திகளை ஏற்ப்படுத்துதல் களப்பயிற்சிகளை நடத்துதல் முதலான சகல துறைகளிலும் கலைப்பேரரசு பங்களிப்பு செய்து வந்துள்ளார். பிரபலமான நடிகர்களோடு சேர்ந்து நடித்ததுமன்றி பன்நூற்றுக்கணக்கான புதிய நடிகர்களையும் உருவாக்கி உள்ளார். 1928ல் பிறந்த இவர் மகாதேவா வித்தியாசாலை, வயாவிளான் ம.ம.வி, திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி ஆகிய வற்றில் கல்வி கற்றார். பாடசாலை வாழ்க்கையிலே கலையார்வம் மிக்கவராக காணப்பட்ட இவர் மகாதேவா வித்தியாசாலையில் 1945ல் "அல்லி அருச்சுனா" என்ற இசை நாடகத்தில் நடித்தார்.வயாவிளான் ம.ம.வியில் "பக்த துருவன்" பரமேஸ்வரா கல்லூரியில் "லோபியின் காதல்" போன்ற நாடகங்களில் நடித்திருந்தார்

  1951- 55ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் B.A பட்டப்படிப்பை மேற்க்கொண்ட கலத்தில் இவரது நாடக பயில்வு மெருகூட்டம் பெற்றது. தமிழகத்தின் தலைசிறந்த நாடகக்கலைஞர்களது ஆக்கங்களைக்கண்டு அனுபவிக்க முடிந்தது. கிறிஸ்தவக்கக்ல்லூரியில் "முதலாளி தொளிலாளி", "குவேனி", ராகி மிடியர் போன்ற நாடகங்களை தயாரித்து நடித்து பெரும் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார். சன்மார்க்க சபை இவரது நாடக ஆர்வத்துக்கு ஏற்ற களமாக அமைந்தது. 1951ல் இங்கு தனது கன்னிப்படைப்பான "விதியின்சதி" என்றநடகத்தை எழுதி தயாரித்து நடித்து மேடை ஏற்றினார். 1961ல் இங்கு அரங்கேறிய நிறைகுடம் நாடகம் நாட்டின் பல பகுதிகளிலும் 25 தடவைகள் மேடை ஏறியது. "அண்டல் ஆறுமுகம்" இருவது தடவைகள் மேடைஏறியது.

 

தான் கற்பித்த பாடசாலைகள் ஆகிய நடேஸ்வரா கல்லூரி, கல்கின்ன முஸ்லீம் மகாவித்தியாலயம், இராகலை தமிழ் இந்து மகாவித்தியாலயம் ஆகிய வற்றிலும் மற்றும் மாவை முத்தமிழ் மன்றம் போன்றவற்றிலும், பல நாடகங்களை தயாரித்தும் களப்பயிற்சிகள் வழங்கியும், புதிய நடிகர்களை உருவாக்கியும் சென்ற இடமெல்லாம் கலை எழுச்சியை ஏற்ப்படுத்தி வந்தார். நாடகக்கலைக்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தார். மரபுவழி நாடகங்களில் மட்டுமன்றி நவீன நாடகங்களிலும் மிகுந்த ஈடுபாடு காட்டிய கலைப்பேரரசு அவர்கள் கலாநிதி மெளன குருவின் "சங்காரம்", திரு தாஸீஸியசின் "பொறுத்தது போதும்" மகா கவியின் "கோடை" போன்ற நாடகங்களிலும் பங்கு பெற்றி நல்ல நடிகராக கணிக்கப்பட்டார்.