|
Sunday, 11 July 2010 18:03 |
|

புத்தர் தவமிருக்க நிழல் கொடுத்த அரசே, சுத்தக்காற்றை எமக்கு தந்தததுதான்; குற்றமோ இன்றைய உன் நிலைக்கு? களை இளந்துபோன காளி அம்மாளின் வாசலில் கலகலத்து பேசும் குஞ்சிதபாதம் எங்கே? காளிக்குகாவலான வைரவரின் கோவில், கூரை இன்றிக் காட்சி தரும் கொடுமைதான் என்ன? தவமிருந்து சமாதி கண்ட நடராசா அம்மான் கோவில், வேலுக்கு விளக்கேற்ற யாருமற்று இருக்கும் நிலை மாறுமோ? வெள்ளை மணல் மீது தேரோடும் வீதி இங்கே புல்லும,; புதரும், கல்லுமாகி வல்லூறுகள் வட்டமிடும் இடமாகியது ஏன்? வெள்ளை உடுப்போடு ஒரு மனிதன் வெறிகொண்டு பார்ப்பது வெறுமையான எம் மண்ணையா? மண்ணை விட்டு ஒடிய எம்மவர் மீள் வரவையா? இல்லை இரண்டையுமா? இவற்றுக்குஎல்லாம் பதில் என்ன ? இரவுக்குப் பின் பகல், இருட்டுக்குப் பின் வெளிச்சம், அழிவுக்கு பின் ஆக்கம், வெளியேற்றத்துக்குப் பின் மீள் வரவு இவை தவறியதாக வரலறே இல்லை. ஆக்கம் - புலந்திரன் மகேசன் இந்த படத்திற்கு உறவுகளின் ஆக்கங்களளும் வரவேற்கப்படுகின்றது - இணைய நிர்வாகம்
|
|
Last Updated on Sunday, 11 July 2010 18:16 |