குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
×

Warning

JFolder: :files: Path is not a folder. Path: /home/www/web48/html/joomla2016/images/nada_angel_ca

×

Notice

There was a problem rendering your image gallery. Please make sure that the folder you are using in the Simple Image Gallery plugin tags exists and contains valid image files. The plugin could not locate the folder: images/nada_angel_ca

எங்கள் குரும்பசிட்டிக் கிராமமக்கள் அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான சமூகசேவையாளர் மறைந்த ஆசி.நடராசா அவர்களுக்கான அமரத்துவ அஞ்சலி அமர்வொன்று கடந்த 4 ம் திகதி ஞாயிறன்று கனடா, ரொறன்ரோவில் நடைபெற்றது. கனடிய குரும்பசிட்டி நலன்புரிச்சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வானது, அன்னாரின் ஆத்மசாந்திக்கான வேண்டுதலாகக் கணிப்பிடப்பட்டது எனலாம். எங்கள் ஊர்மக்கள் மாத்திரமல்லாது அயலூர்க் கிராம மக்களும் பிரதிநிதித்துவம் செய்து அமரரின் சேவைகளை வியந்துபோற்றியது அவருக்குக்கிடைத்த ஆத்மசாந்தி என்பதில் ஐயமில்லை.

 

{gallery}nada_angel_ca{/gallery}

‘கவிநாயகர்’ வி.கந்தவனம் அவர்கள் தலைமையேற்று, அமரர் ஆசி.நடராசா அவர்களின் வாழ்வியல் பழக்கவழக்கங்களைப்பற்றிச் சுருக்கமாக எடுத்துக்கூறியதுடன் அன்னாருக்கான மலரஞ்சலியையும் தொடக்கிவைத்தார். திருமதி யசோதரா அரவிந்தன் அவர்களின் தேவாரபதிகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு மௌனாஞ்சலி இடம்பெற்று, அடுத்து சபைத்தலைவர் திரு. யோ.திலீபன் அவர்களின் வரவேற்புரை கூறப்பட்டது. அதன்பின் அமரருக்கான அஞ்சலியுரைகளை நலன்புரிச்சபையின்  உறுப்பினர்கள், ஊர்மக்கள், அயலூர்ப் பிரதிநிதிகள் மற்றும் அவர்தம் அன்பர்கள் சிலரும் தந்தார்கள்.

முன்னாள் பாடசாலை அதிபர் திரு. நா.கணேசபிள்ளை அவர்கள் அமரருடன் ஒன்றாகக் கடமைகள் செய்தபோது இடம்பெற்ற சம்பவங்களைப்பற்றிக்கூறி அவரின் அருமை பெருமைகளைக் குறிப்பிட்டார். மகாஜனாக்கல்லூரிப் பழையமாணவர்சங்கத் தலைவர் திரு. நா.சாந்திநாதன் அவர்கள் அமரரின் சேவைகளைப்பற்றி, தான் கேள்விப்பட்டு வியந்த சம்பவங்களை மிகவும் அழகாகத்தெரிவித்துக்கொண்டார். குரும்பசிட்டி நாடகக்கலைஞர் திரு. இ.இராசரத்தினம் அவர்கள் அன்னாரின் கலைத்துறை சம்பந்தமாகச் சில நிகழ்ச்சிகளைக்கூறிக்கொண்டதுடன், அவர்சம்பந்தமாக வெளிவந்த இணையத்தள விபரங்களைப்பற்றியும் சபையினருக்குத் தெரியப்படுத்தினார். திரு. சி.கிருஷ்ணகாந்தன் அவர்கள், தான் நன்கு அறிந்துவைத்திருந்த அமரர் அவர்களின் ஊர்ப்பற்றினைப்பற்றி இங்கு நினைவுகூர்ந்தார்.

அவரைத்தொடர்ந்து, குப்பிழான் வாழ் மக்களையும் அவர்தம் சனசமூக நிலையத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வூர்க் கலைஞர் திரு. சி.மேகவர்ணன் அவர்கள் சிறப்பஞ்சலி செய்ததுடன் தான் ஏழுதிய கவிதையொன்றையும் அங்கு வாசித்து அமரரை நேசித்தார். அடுத்ததாக அஞ்சலியுரைதர வந்தவர் திருமதி கணேஸ்வரி குகநேசன் அவர்களாவர். அவர், அமரரின் பிறப்பு வளர்ப்பு பற்றியெலாம் தான் கண்டும் கேட்டுமறிந்தவற்றைக் கூறியதுடன் அஞ்சலிக்கவிதையொன்றையும் வழங்கினார்.  மாணவப்பருவத்திலும் தற்காலிக ஆசிரியப்பணியிலும் இருந்தபோது அன்னாருடன் ஈடுபட்ட பல சம்பவங்களை அழகாக எடுத்துக்கூறி, அன்னாருடனான அந்நியோன்னியத்தைத் தொட்டுச்சென்றவர் திரு. இ.உமாராஜ் அவர்களாவர். அடுத்துப் பேச்சில் பரிணமித்தவர், வசாவிளான் வாழ் மக்களின் பிரதிநிதியாகவும், வசாவிளான் மகாவித்தியாலயப் பழையமாணவர் சங்கப் பிரதிநிதியாவும் கலந்துகொண்ட செ.நவரத்தினம் ஆவர். அவரின் உரையில் அமரர் ஆசி. நடராசா அவர்களின் போர்க்கால நடவடிக்கைகளின் அர்த்தம் தெரிந்தது. சொல்லொணாத் துன்பப்பட்டிருந்த மக்களுக்காக அவர் பட்டபாட்டின் விபரம் புரிந்தது. அதன்பின் இவ்வஞ்சலிநிகழ்வில் கலந்துகொண்ட நம்மவர் திரு. ஐ. ஜெகதீஸ்வரன் அவர்கள், அமரர் அவர்களின் இறுதிக்காலச் சிந்தனையின் மகத்துவம் பற்றியும் அன்னார் தன்னுள் கொண்டிருந்த ஆளுமைத்திறன் பற்றியும் எடுத்துக்கூறினார்.

கனடியத் தமிழ்மக்களின் சமூகவியல் நீரோட்டத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் ஒருவரான, பிரபல வாரஇதழாம் ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்கள் இந்நிகழ்வுக்கு வந்திருந்து அமரத்துவமடைந்த பெருமகன் ஆசி.நடராசா அவர்களைப் பெருமைப்படுத்திப்பேசியது, குரும்பசிட்டி மக்களுக்கே பெருமைசேர்த்ததெனலாம். பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த எங்களது பிறிதொரு கலைக்குடும்ப வாரிசான திருமதி. லங்கா மனோரஞ்சிதன் அவர்கள் தான் அறிந்துகொண்ட ஆசிரியஅமரரின் அருமைகளைக் குறிப்பிட்டு சிற்றுரை வழங்கியது சிறப்பாகவே இருந்தது.    

 மேற்படி அஞ்சலி நிகழ்வானது அமைதியாகவும் சிறப்பாகவும் முடியும் தறுவாயில், கனடா- குரும்பசிட்டி நலன்புரி;சபைச் செயலாளர் திரு. க.சிவதாசன் அவர்களால் நன்றியுரை பகரப்பட்டதுடன் மாத்திரமல்லாது, அமரரின் திட்டங்களைச் செயற்படுத்த ஏலவே ஆரம்பிக்கப்பட்;டிருந்த நிதிதிரட்டலுக்குக் கிடைத்த நல்லாதரவைப்பற்றியும் தெரிவித்ததுடன், அதைத் தொடர்வதற்கான அவசியம் பற்றியும் வலியுறுத்திக்கூறினார். இறுதியாக இத்தகு சிறப்பான அஞ்சலி நிகழ்வை முடித்துவைத்த ‘கவிநாயகர்’ வி.கந்தவனம் அவர்கள், அமரர் ஆசி. நடராசா அவர்களின் அறிந்த, அறியப்படாத அருமை பெருமைகளைப்பற்றிய அரிய நூலொன்றை வெளிக்கொணரவேண்டியது அவசியமென வேண்டிக்கொண்டார். மொன்றியல் நகரிலிருந்து வந்து கலந்துகொண்ட கலைஞர் திரு. ந. கோபிநாத் அவர்கள், குரும்பசிட்டிக் கலைஞரும் முன்னாள் நாடக திரைப்படத் தயாரிப்பாளருமாகிய க.சிவதாசன் அவர்களின் பாரியார் போன்றவர்கள் உட்பட அனைவரும் வருகை தந்திருந்த அமருக்கான மகத்தான அஞ்சலி நிகழ்வு இனிதே மனத்திருப்தியுடன் முடிவுற்றது.
நன்றி! வணக்கம்!!                             

 

ஆக்கம்: சி.கிருஷ்ணகாந்தன் - canada