குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

ஈழத்திலும் யாழ்ப்பாணத்திலும் எமது ஊரை முதன் முதற் பிரகாசிக்கச் செய்தவர்களில் முதல் வைத்து எண்ணத்தக்கவர்கள் நல்லையா சகோதரர்கள். அவர்களில்; மூத்தவர் திரு ரி.ஆர்.நல்லையா ( துரைரத்தினம்) இளையவர் திரு.ஆர்.ஆர் நல்லையா (இராசரத்தினம்) இவர்கள் பாடசாலைப் பருவத்திலேயே விளையாட்டுத்துறையிற் சாதனை படைத்தவர்கள்.

 

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே கல்லூரிகளுக்கிடையில் நடை பெறும் கிறிக்கெட் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்க் கல்லூரி சிறந்து விளங்கியது. 1898 அதனை முறியடித்து யாழ்ப்பானம் மத்திய கல்லூரிக்கு வெற்றி விருதை வாங்கிக்கொடுத்தவர்கள் நல்லையா சகோதரர்கள் என அக் கல்லூரியின் பதிவேடுகள் மிகவும் புகழ்ந்திருக்கின்றன். திரு ரி ஆர். நல்லயா விளையாட்டு வீரர்களுள் தொடர்ந்து 3 வருடங்கள் சம்பியன் ஆகி வெற்றிக் கிண்ணத்தை நிரந்தரமாக மத்திய கல்லூரிக்கே கிடைக்கச் செய்தார் என்றும் தெரிகிறது.

           இருவரும் நியாய துரந்தர்களாகி அதன் மூலம் பெரும் புகழ்ழீட்டினர். திரு. ஆர்.ஆர்.நல்லையா பரீட்சையில் புலமைப்பரிசிலும் பெற்றிருந்தார்.அக்கால யாழ்ப்பாண நீதிமன்றம் இவர்களின் ஏக போக உரிமையாய் இருந்தது. பிரபல வழக்குகளில் எல்லம் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். அரசியல் ஈடுபாடே பெரும் புகழைச்சேர்த்தது; 1921 முதல் யாழ்ப்பாண நகர சபையின் உறுப்பினராகிப் பல்லாண்ண்டுகள் தொடந்திருந்து பின் நாட்களில் அதன் தலைவராகவும் விளங்கினார்.அரசியல் வானில் ஒளிகாலும் நிரந்திர நட்டத்திரமாகக் காணப்பட்டார்.

        நல்லையா சகோதரர்கல் பொன்பரமானந்தரினதும் பிறப்பு,இறப்பு பதிவுகாரராக விளங்கிய மு.சின்னையா(திரு.மனோறஞ்சிதம் அவர்களின் தகப்பனார்) ஆகியோர்களதும் உறவினர்கள் ஆவார். குரும்பசிட்டி மகாதேவா வித்தியசாலையின் முகாமையாளர்களாக இருவரும் கடைமையாற்ரினர்.கிராமத்தில் ஏற்படும் சிறு பிணக்குகளைத்  தீர்துவைத்தனர்.குரும்பசிட்டி மக்கள் எத்தேவைக்கு அவர்களை அணுகும் போது மகிழ்ச்சியோடு உதவி வந்தனர்.

 

ஆர்.நல்லையா அவர்கள் யாழ்ப்பாண நகரசபையின் தலைவராக இருந்த போது மிகச்சிறந்த ஒரு நகர சபை மண்டபத்தை நிர்மாணித்தார்.1986இல் வெடித்த கொடிய போர்ச் சூழலால் அது முற்றாகவே தகர்க்கப்பட்டு விட்டது.